வெள்ளி, 5 ஏப்ரல், 2013

மனித மேம்பாடு வரிசையில் இலங்கை 92 இந்தியா 136 பாகிஸ்தான் 146

தற்போது வெளியாகியுள்ள ஐ.நா. அறிக்கை ஒன்றில், மனித மேம்பாடு
வரிசையில், உலக நாடுகளில் 92-வது இடம் இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி? இன்னும் இருக்கிறது. இதே மனித மேம்பாடு வரிசை பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம், 136!
இலங்கை 92-வது இடத்தில் இருக்க, 136-வது இடத்தில் இந்தியா இருந்தாலும், சந்தோஷம் கொள்ள மற்றொரு விஷயம், இந்தப் பட்டியலில் பாகிஸ்தான், அதற்கும் கீழே, 146-வது இடத்தில் உள்ளது.
ஐ.நா. மனித மேம்பாட்டு திட்டத்தின் (Human Development Program – UNDP) இந்த ஆண்டுக்கான அறிக்கையில், மனித மேம்பாடு வளம் சுட்டெண் வரிசையில் (Human Development Index – HDI) 187 நாடுகள் மனித மேம்பாட்டு விஷயத்தில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
1-ம், 2-ம், 3-ம் இடங்களில், முறையே நார்வே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
சுவிட்சலாந்து 9-வது இடத்திலும், கனடா 11-வது இடத்திலும், பிரான்ஸ் 20-வது இடத்திலும், கத்தார் 36-வது இடத்திலும், இலங்கை 92-வது இடத்திலும், இந்தியா 136-வது இடத்திலும் உள்ளன.
என்ன சார் இது?
இலங்கையில் மனித உரிமை மீறல் என்று ஐ.நா.வில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறோம். மனித மேம்பாட்டில், இந்தியாவை விட, இலங்கை உயர்ந்த இடத்தில் உள்ளதாக அதே ஐ.நா. இப்போது அறிக்கை விடுத்திருக்கிறது!
பட்டியல் தப்பா? அச்சுப் பிழையா? அல்லது, சிங், ‘கம்’மென்று இருக்க இதுவும் காரணமா?  எந்த அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், எமது ஆங்கில இணையத்தளத்தில் உள்ள கட்டுரையை கீழேயுள்ள லிங்கில் பார்க்கவும்  hdr.undp.org/en/statistics/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக