சனி, 27 ஏப்ரல், 2013

கரூரில் ஆழ்துளை கிணற்றில் 7வயது சிறுமி முத்து லட்சுமி 9 மணிநேரமாக மீட்புப் பணி

கரூர் அருகே 700 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த இனங்கனூர் என்ற இடத்தில் தனது தாத்தாவுடன் தோட்டத்திற்குச் சென்ற 7வயது சிறுமி முத்து லட்சுமி, 700 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இன்று காலை விழுந்தார். இதையடுத்து சிறுமியை மீட்கும் பணி நடந்து வருகிறது. சிறுமிக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கி வருகிறது. மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட நவீன கருவி மூலம் சிறுமியை மீட்கும் பணி தோல்வியடைந்துள்ளது. எனினும் மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக