வியாழன், 11 ஏப்ரல், 2013

சிறுமி கற்புக்கு விலை 50 ஆயிரம் ரூபாய் பஞ்சாயத்து தீர்ப்பு !

காதலித்து கர்ப்பிணியான
சிறுமியை ஏமாற்றிய காதலனுக்கு ரூ.50 ஆயிரம்
அபராதம் விதித்து பஞ்சாயத்து அதிர்ச்சி தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திர மாநிலம் குப்பம் அருகே உள்ள குடுபள்ளி மண்டலம் சின்ன கொல்லப்பள்ளி பஞ்சாயத்து வட்ட கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (25), விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். சிறுமி தற்போது 3 மாத கர்ப்பிணியானார். Ôதான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் வீட்டில் கொன்று விடுவார்கள். ஆதலால் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்Õ என காதலன் சிவக்குமாரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிவக்குமார் மறுத்துள்ளார்.இதனால் வேதனையடைந்த சிறுமி தாயிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் கிராமத்து பெரியவர்களிடம் எனது மகளை சிவக்குமார் திருமணம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டார்.
ஊர் பஞ்சாயத்தார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியை Ôதனக்கு தெரியாதுÕ எனக்கூறி தட்டிக்கழித்த சிவக்குமார் பின்னர் காதலித்த விஷயத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் Ôதிருமணம் செய்துகொள்ள முடியாதுÕ என மறுத்துவிட்டார்.
இதையடுத்து கிராம பெரியவர்கள், பாதிக்கப்பட்ட பெண் சிறுமி என்பதால் தற்போது திருமணம் செய்து வைக்க முடியாது. இதற்கு சட்டம் இடம் கொடுக்காதுÕ என கூறியதோடு, Ôசிவக்குமாருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அவரை கட்டாயப்படுத்த முடியாதுÕ எனக்கூறி கருக்கலைப்புக்காக ரூ.50 ஆயிரத்தை காதலன் தரப்பில் சிறுமிக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினர்.இதையடுத்து சிவக்குமார் தரப்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இதை சிறுமியின் குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக