புதன், 3 ஏப்ரல், 2013

உத்தரப்பிரதேசத்தில் 4 பெண்கள் மீது ஆசிட் வீச்சு

 Four Indian women, from the Muzaffarnagar district in the Indian state of Uttar Pradesh, have suffered severe burn injuries after being attacked with acid.
They were attacked by two men on a motorcycle, on Tuesday evening. The women (three are teachers and one is a student) were returning home after an examination in school when they were attacked.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், பைக்கில் வந்த இரண்டு பேர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 4 பெண்கள் மீது ஆசிட் வீசிய சம்பவத்தில் ஒரு பெண் கவலைக்கிடமாக உள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஷாம்லி என்ற பகுதியில், 4 சகோதரிகள் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர், அவர்கள் மீது ஆசிட்டை வீசியுள்ளனர். இதில், நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு பெண் மட்டும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நான்கு பேரில், 3 பெண்கள் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர். மற்றொருவர்  பள்ளி மாணவியாவார். நால்வரும் ஒன்றாக வீடு திரும்பும் போது இச்சம்பவம் நடந்துள்ளது. காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக