வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சிவகங்கை மஞ்சுவிரட்டு காளைகள் பாய்ந்து 3 பேர் பலி! 59 பேர் காயம்!!

சிவகங்கை மாவட்டம் கண்ட்ராமாணிக்கம் கிராமத்தில் முத்து முருகையா
கோவில் திருவிழாவை முன்னிட்டு சித்திரை பவுர்ணமியில் நேற்று மஞ்சுவிரட்டு என்றழைக்கப்படும் மாட்டு வேடிக்கை நடத்தப்பட்டது.
10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்த மாட்டுவேடிக்கையில் சுமார் 350 முரட்டுக் காளைகள் விடப்பட்டன. காளைகளை மாடு பிடிக்க வந்த வீரர்கள் அடக்கி கொண்டிருந்தபோது, காளைகள் பார்வையாளர்கள் பக்கமாக பாய்ந்து விட்டன.
இதில் 3 பார்வையாளர்கள் உயிரிழந்தனர். 59 பேர் படுகாயமடைந்தனர். இதில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. போதுமான போலீஸ் பாதுகாப்பு இருந்திருந்தால் இந்த உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக