செவ்வாய், 30 ஏப்ரல், 2013

2.5 கோடி மோசடி பவர் ஸ்டார் ! இவரை தூக்கி பிடித்த மீடியாக்கள் மீது சந்தேகம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை: போலீஸ் கமிஷனர் ஜார்ஜ¤டம் வடபழனியை சேர்ந்த தொழிலதிபர் மணியம் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நான் மலேசியாவில் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறேன். என் தொழில் சம்பந்தமாக எனக்கு கடந்த 2010ம் ஆண்டு ரூ.100 கோடி தேவைப்பட்டது. இது குறித்து சென்னையை சேர்ந்த புரோக்கர் வெங்கம்மாளிடம் கூறினேன். அதற்கு அவர் எனக்கு தெரிந்த நபருக்கு ரூ.1000 கோடி அளவிற்கு சொத்து உள்ளது என்றும், அவரிடம் நான் கடன் வாங்கி தருகிறேன் என்று தெரிவித்தார். அதன்படி, சென்னையை சேர்ந்த டாக்டர் சீனிவாசன் (நடிகர் பவர் ஸ்டார்) என்பவரிடம் வெங்கம்மாள் அழைத்து சென்றார்.


டாக்டர் சீனிவாசனை சந்தித்து தொழில் சம்பந்தமாக எனக்கு ரூ.100 கோடி கடன் கேட்டேன். அதற்கு அவர், பணம் தருவதாக தெரிவித்தார். ரூ.100 கோடி கொடுப்பதற்கு வருமானவரி உள்ளிட்ட செலவுகளுக்கு முன்பணமாக ரூ.2.5 கோடி தர வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அதன்படி, அமெரிக்க டாலர் மதிப்பில் டி.டி எடுத்து கொடுத்தேன். ஒரு மாதத்தில் பணம் தருவதாக டாக்டர் சீனிவாசன் உறுதியளித்தார். ஆனால், அவர் பணம் தரவில்லை. இதுகுறித்து அவரிடம் பல முறை பணம் கேட்ட போது, எனக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தார். உயிருக்கு பயந்து பணத்தை அவரிடம் கேட்கவில்லை. தற்போது, பண மோசடியில் டாக்டர் சீனிவாசனை போலீசார் கைது செய்துள்ளதால் நான், கொடுத்த பணம் ரூ.2.5 கோடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ.100 கோடி கடன் வாங்கி தருவதாக கூறிய புரோக்கர் வெங்கம்மாள் (40), பவர் ஸ்டாரின் மனைவிகள் ஜூலி, தூரியா உள்ளிட்டோர் மீது  சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தேன்.இவ்வாறு மணியம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக