வியாழன், 28 மார்ச், 2013

மாணவர்களை தூண்டிவிடும் காமெடி சகிக்கலை புதிய தலைமுறை TV. Jaya,Karuna,vaiko

சிவ.சரவணக்குமார்
''தமிழினத்தலைவர் '' [ அப்படி ஒரு பதவி இருக்கா என்ன? ]பதவிக்கான போட்டியில் ஜெ வும் கருணா நிதியும் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் காமெடி சகிக்கவில்லை.......மெல்ல மெல்ல தமிழர்களை ஒரு பாசிசக்கூட்டமாக்கும் முயற்சி சத்தமில்லாமல் நடந்து வருகிறது......இவர்கள் ஒரு பக்கம் என்றால் , எங்கே கல்லூரிகளை திறந்து விடுவார்களோ, படிக்க வேண்டி இருக்குமே என்ற கவலையில் போராட்டத்தை ''முன்னெடுக்கும் '' மக்கு மாணவர்கள் ஒரு பக்கம்......கொஞ்சம் கூட மாணவர்களின் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாமல் வியாபார நோக்கத்தோடு அவர்களை தூண்டிவிடும் புதிய தலைமுறை போன்ற மீடியாக்கள் ஒரு புறம்.......எவன் வீட்டில் எழவு விழுந்தாலும் அங்கு சென்று அழுது அதை ஈழத்தமிழருக்கான உயிர்த்தியாகமாக மாற்றும் வைகோ போன்ற அரசியல் வியாதிகள் ஒரு பக்கம்......ஹ்.ம்...ம்....ம்.....மாணவர்கள் ஒரு முறை தனக்காக போராடத்திரண்ட போது, சுய நலத்துக்காக அவர்களை பயன்படுத்தாமல் , '' போ.....போ...போய் படிக்கிற வழியப்பாரு '' என்று விரட்டிய காமராஜரைப்போன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்டதலைவர்கள் இனிமேல் நமக்கு வாய்க்கவே மாட்டார்களா?<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக