திங்கள், 25 மார்ச், 2013

T.M.Soundararajan க்கு வாழ்நாள் சாதனையாளர் சிறப்பு விருது

பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் இன்று தனது 91–வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்வரலயா நிறுவனம் சார்பில் ‘வாழ்நாள் சாதனையாளர் சிறப்பு விருது’ வழங்கப்பட்டது.இன்று மாலை 6.30 மணிக்கு கழக்கூட்டம் அல்சாஜ் கன்வென்சன் சென்டர் அரங்கில் நடைபெற்ற விழாவில், டி.எம்.சவுந்தரராஜனுக்கு இசையமைப்பாளர் எம்.ஜெயசந்திரனும், கே.ஜே.ஜேசுதாசும் சேர்ந்து இந்த விருதை வழங்கி பாராட்டி பேசினார்கள். விருதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, தனது 91–வது பிறந்தநாளை, அந்த விழா மேடையிலேயே பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு, பாடகர் கே.ஜே.ஏசுதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில பொதுச்செயலாளர் ஆகியோர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து ‘ஓல்ட் இஸ் கோல்ட்’ மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக