சனி, 23 மார்ச், 2013

Sun Tv செய்தி ஆசிரியர் ராஜா, உதவியாளர் வெற்றிவேந்தனும் கைது!

சன் டிவி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் சன் செய்தி ஆசிரியர் ராஜாவின் உதவியாளர் வெற்றி வேந்தனும் சுற்றிவ,த்து கைது செய்யப்பட்டார்.ராஜா கைதானதையடுத்து இவர் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது.சன் டிவி செய்திப் பிரிவில் வாசிப்பாளராக சுமார் ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் 28 வயதாகும் அகிலா என்பவர்.அகிலாவுக்கு தொடர்ந்து ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் இணங்க வைக்க அவருக்கு நிறைய ஆசை வார்த்தைகளையும் முடியாத பட்சத்தில் மிரட்டலையும் விடுத்துள்ளார் ராஜா என்று புகார் பதிவானது.மேலும் இரவு நேரங்களில் எஸ்.எம்.எஸ்., போன்கால்கள் என்று பெரும் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ராஜாவின் கூட்டாளியான வெற்றிவேந்தன் என்ற மற்றொரு பத்திரிக்கையாளரை வைத்து இந்த செய்திவாசிப்பாளரை அணுகியுள்ளார் ராஜா, அதாவது இணங்கினால் நிறைய சம்பளம் மற்றும் பிற வசதிகள் செய்யப்படும் என்று ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.மேலும் சில பெண் செய்தியாளர்களிடம் வெற்றி வேந்தனும் பாலியல் தொடர்பு வைத்திருந்தது புகைப்படங்களுடன் லீக் ஆனதும் செய்தி ஆசிரியர் ராஜா அவரை வேறு ஊருக்கு பணி இடமாற்றமும் செய்துள்ளது தெரியவந்துள்ளது.இந்தப் புகாரை அனுப்பிய அந்தப் பெண் தன் புகார் மனுவுடன் வெற்றிவேந்தனின் குரல் பதிவுகள் மற்றும் அவரது பாலியல் உறவு தொடர்பான புகைப்படங்களையும் கமிஷனரிடம் சமர்ப்பித்ததாக தெரிகிறது.இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜா மற்றும் அவரது உதவியாளர் வெற்றி வேந்தனைக் கைது செய்ய போலீஸ் முடிவெடுத்து ராஜாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.ஆனால் இவருக்கு பல வழிகளிலும் உறுதுணையாக இருந்து வன்ட்ததோடு இவருமே பல செய்தி வாசிப்பாளருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் புகார் மனுவுடன் சேர்த்து அளிக்கப்பட்டதால் ராஜா இவரை திருச்சிக்கு பணி இட மாற்றம் செய்துள்ளார்.இந்த நிலையில் அவரையும் கைது செய்துள்ளது போலீஸ்.ராஜா போன்றவர்களை பணி நீக்கம் செய்ய சன் நிர்வாகம் முன் வரவேண்டும் போலீசாரும் ராஜா, வெற்றிவேந்தன் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அந்தப் பெண் கூறியுள்ளார். 

  இவன்தான் எடிட்டருக்கு ஆள் புடிச்சு குடுக்கறவன். “
“ஆள் புடிச்சுன்னா…“
“உனக்கு ஒண்ணும் புரியாது… எடிட்டர் எந்தப் பொண்ணு மேல கண்ணு வக்கிறாரோ, அந்தப் பொண்ணை வழிக்கு கொண்டு வந்து எடிட்டர் மடி மேல விழ வக்கிற வரைக்கும் விட மாட்டான்.“
“நம்பவே முடியல.. இப்படில்லாமா பண்ணுவாங்க.. “ விபரமா படிக்கனும்னா சவுக்கு டாட் நெட்டுக்கு விசிட் பண்ணி பாருங்க நம்மளால முடியாதப்பா அவ்வளவு கதை இருக்கப்பா 

“இதை விட ஏராளமான கதைங்க இருக்கு… உனக்கு இவனுங்களப் பத்தி தெரியாது. ரெண்டும் மோசமான பொறுக்கிங்க“
“என்கிட்ட அந்த மாதிரி இது வரை நடந்துக்கல.. ஆனா நம்பவே முடியல.. “
“ரொம்ப நாள் சந்தோஷமா இருந்துடாத… உன் பக்கம் அவனுங்க பார்வை எப்போ திரும்புதுன்னு தெரியல“ என்றாள் சுகந்தி.
சுகந்தி சொன்னது திகிலை ஏற்படுத்தியது.
ஒரே வாரத்தில் என் பயம் உண்மையாகியது.  “மேடம் எடிட்டர் கூப்ட்றார்“ என்ற குரல் கேட்டதும் பயத்தோடே எழுந்து சென்றேன்.  உள்ளே செல்லும் முன்பாகவே உடையை அனிச்சையாக சரி செய்து கொண்டேன்.  ஆண்கள் பாத்ரூமில் நுழைவது போன்ற படபடப்பு ஏற்பட்டது.
“வாம்மா… உக்காரு.  எப்படி போகுது வேலையெல்லாம்… ?“
“நல்லாப் போகுது சார்.“
“வீடு எங்க உனக்கு… ? அரும்பாக்கம் சார். மேரேஜ் ஆயிடுச்சா… ?“
“டைவோர்ஸி சார்.. “
“என்ன ஆச்சு….“
“அத மறக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் சார்… கேக்காதீங்க.. “
“ஓ.கே… ஓ.கே..   கொழந்தைங்க இருக்கா…“
“ஒரு பையன் சார்…. ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்ட் படிக்கறான் சார்.. “
“பையன யார் பாத்துக்கறா ? “
“அம்மா பாத்துக்கறாங்க சார்.. “
“அம்மா வேலை பாக்கறாங்களா… ? “
“இல்ல சார்..  வீட்லதான் இருக்காங்க…“
“நீங்க ஒருத்தர்தான் எர்னிங்கா ? “
“ஆமாம் சார்…“
“நல்லா வேலை பாருங்க. சீக்கிரம் கன்ஃபர்மேஷன் போட்டுட்றேன்.  தென் சேலரி இன்க்ரீஸ் ஆகும்.  எந்த ஹெல்ப்னாலும் என்கிட்ட கேளுங்க.  போன் பண்ணுங்க…  என் போன் நம்பர் உங்ககிட்ட இருக்கா.. “
“இல்ல சார்“
“எழுதிக்கங்க“ என்று அவர் போன் நம்பரைக் கொடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக