புதன், 20 மார்ச், 2013

Piya Bajpa: கவர்ச்சி காட்டுவது போரடித்துவிட்டது

கவர்ச்சி காட்டி நடிக்கும் ஜாலியான வேடங்கள் போரடித்துவிட்டது என்றார் பியா. ‘கோவா', ‘கோ' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா. அவர் கூறியதாவது: இதுவரை ஏற்று நடித்த வேடங்கள் எல்லாமே கவர்ச்சியுடன் கூடிய கமர்ஷியலான கேரக்டர்கள். வந்தோமா ஹீரோவுடன் ஜோடி சேர்ந்தோமா, கவர்ச்சி காட்டினோமா என்று வழக்கமான வேலையாக இருந்தது. ‘கோÕ படத்துக்கு பிறகு அதேபோல் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. ஜாலியான நவநாகரீக பெண்ணாக நடித்து போரடித்துவிட்டது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களுக்காக காத்திருக்கிறேன். தமிழில் ‘கூட்டம்' என்ற படத்தில் பிராமண பெண்ணாக நடிக்கிறேன். முதல்முறையாக படம் முழுவதும் பாரம்பரியமான பாவாடை, தாவணி அணிந்து நடிக்கிறேன். இது வழக்கமான ஜாலி வேடம் கிடையாது. நகைச்சுவையும் இந்த கதாபாத்திரத்தில் இழையோடும். என்னுடைய விருப்பமும் இதுபோன்ற வேடம்தான். வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுக்காக காத்திருந்தேன். அந்த வரிசையில் வந்த படம்தான் கூட்டம். தெலுங்கிலும் ‘தலம்‘ என்ற பெயரில் இப்படம் உருவாகிறது. தற்போது தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது.  இவ்வாறு பியா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக