வியாழன், 28 மார்ச், 2013

Nokia 2,000 கோடி வரி ஏய்ப்பு

நோக்கியா செல்போன் நிறுவனம் ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கூறி,
வருமானவரித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஃபின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையை நடத்திவருகிறது. அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ளது. நோக்கியா கடந்த சில ஆண்டுகளாக ஒழுங்காக வரி செலுத்தவில்லை என்று புகார் எழுந்ததையடுத்து, வருமானவரித்துறையினர் கடந்த ஜனவரி மாதம் நோக்கியா நிறுவன அலுவலகங்களில் ஆய்வில் ஈடுபட்டனர். செல்போன் விலைகளை குறைத்துகாட்டி, வரிஏய்ப்பு செய்யப்பட்டிருந்தது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை முழுதையும் விரைவில் செலுத்துமாறு கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் வரிஏய்ப்பு புகாரை நோக்கியா நிறுவனம் மறுத்துள்ளது. உள்ளூர் வரி விதிமுறைகள் மற்றும் பிந்தைய பல்லாண்டு ஒப்பந்தம் ஆகியவற்றை மதித்து நடந்து வருவதாகவும் நோக்கியா கூறியுள்ளது. இதனிடையே கடந்த 6 ஆண்டுகளாக சுமார் மூன்றாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக