சனி, 2 மார்ச், 2013

Indian Cinema நூறாவது வருடம் சென்னையில் விழா நடத்த ஏற்பாடு

இந்திய சினிமாவிற்கு இது நூறாவது வருடம். இந்திய சினிமாவில் இருக்கும் பல திரையுலகங்களும் இந்த நூற்றாண்டு விழாவை பல வகைகளில் கொண்டாட திட்டமிட்டிருக்கின்றனர்.  தென்னிந்திய சினிமாவை சேர்ந்த கோலிவுட், டோலிவுட், மாலிவுட், சாண்டில்வுட் ஆகிய நான்கு திரையுலகங்களும்(தென்னிந்திய திரையுலகினர்) இணைந்து இந்நூற்றாண்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடவிருக்கிறார்கள்.சமீபத்தில் தென்னிந்திய திரையுலக ஃபில்ம் சேம்பரின் பிரதிநிதிகள் கலந்து பேசி இதற்கான முடிவெடுத்துள்ளனர். நூற்றாண்டு விழாவைப் பற்றி பேசிய தென்னிந்திய திரையுலக ஃபில்ம் சேம்பரின் தலைவர் கல்யான் பேசிய போது “ இது தென்னிந்தியாவின் கொண்டாட்டத்திற்கான நேரம். ஏப்ரல் 26, 27,28 ஆகிய தேதிகளில் சென்னையில் விழா நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். 

திரையுலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்த திரையுலக ஜாம்பாவான்கள் பலரும் கண்டிப்பாக கலந்துகொள்வார்கள். அந்தகால சினிமா பற்றியும், இந்த கால சினிமா பற்றியும் விரிவாக அலசப்படும். மேலும் இசை, நடனம் என பல கலை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறோம்.  நூற்றாண்டு விழாவின் கடைசி நாளை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு, உலகின் மிக முக்கிய நட்சத்திரங்களை வரவழைக்கிறோம். சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்நூற்றாண்டு விழா நடைபெறும்.
அங்கு இப்போது மேம்பாட்டுப் பணிகள் நடந்துகொண்டிருப்பதால், ஒருவேளை அந்த இடம் கிடைக்காமல் போனால்  முன்னெச்சரிக்கையாக ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபில்ம் சிட்டியையும் ஆயத்தமாகவே வைத்திருக்கிறோம்” என்று கூறினார். 
கர்நாடக திரையுலக ஃபில்ம் சேம்பரின் தலைவர் விஜயகுமார் பேசுகையில் “ இந்திய நாட்டின் ஜனாதிபதியை சிறப்பு விருந்தினராக அழைக்கவும், தென்னிந்தியாவைச் சார்ந்த நான்கு மாநில முதல்வர்களையும் விழாவிற்கு வரவழைக்கவும் முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை இந்திய மக்கள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய விழாவாக நடந்த வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.cinema.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக