திங்கள், 11 மார்ச், 2013

தனுஷின் ‘கொலவெறி’ பழைய பாக்கி: அடுத்த படத்தின் தந்திர HOP STEP & JUMP பிசினெஸ்!


Viruvirupu சமீபகால படங்கள் எதுவும் கைகொடுக்காத நிலையில், மீண்டும் தனது அண்ணனும் டைரக்டருமான செல்வராகவனுடன் ஒரு புதிய படத்தில் இணைகிறார் நடிகர் தனுஷ். இந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார் என்பது உபரி தகவல். ‘3’ படம் தம்மை உச்சத்தில் கொண்டுபோய் விடும் என்று தனுஷ் நினைத்திருந்தார். அந்த படத்தின் வியாபாரமும், உச்ச அளவிலேயே நடந்தது. தனுஷ் படத்துக்கான மார்க்கெட் ரேட்டைவிட, சுமார் 30 சதவீதம் அதிக விலைக்கு போனது. படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா என்பதால், வந்த பணமும் குடும்பத்துக்கு உள்ளேயே நின்று கொண்டது!
ஒய் திஸ் கொலவெறி பாடல் ஹிட் ஆனதைத் தொடர்ந்து அந்த பாடல் இடம்பெற்றிருந்த ஒரே காரணத்தால், 3 படத்தின் விநியோக உரிமையை தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா ஏலத்தில் விற்றார் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே தனுஷ் நடித்த திருடா திருடி என்ற படத்தின் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு விநியோக உரிமை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
தமிழை விடுங்கள். ஆந்திராவில் பெரியளவில் மார்க்கெட் வேல்யூ இல்லாத தனுஷூக்கு இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு, ஒரு ஏரியாவில் மட்டும் ரூ.3 கோடிக்கு விற்பனையாகியது. எல்லாம் ஒரே பாடல் கொடுத்த எதிர்பார்ப்பு.
பிசினெஸ் சென்ஸ் தெரிந்தவர்கள், இது மிக ரிஸ்க்கியான பபுள் என்றார்கள். நடந்ததும் அதுதான். பபுள் உடைந்தது.

ஆந்திராக்காரர்கள் காரமிளகாய் கடித்தவர்களாக, கஸ்தூரி ராஜா வீட்டு வாசலுக்கே வந்துவிட்டார்கள். தமிழிலும் ஏக பிரச்னைகள். அடுத்த தயாரிப்பில் டிஸ்கவுன்ட் கொடுப்பதாக விநியோகஸ்தர்களை சமாளித்து வைத்திருக்கிறார்கள்.
இந்த பின்னணியில், மீண்டும் ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம், தனுஷூக்கு. அதையும் செய்ய வேண்டும், பிசினெஸ்ஸையும் ட்ரிக்கியாக செய்ய வேண்டும்.

வெளி குதிரைகளில் ஏறுவதைவிட, சொந்தக் குதிரை பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். 2002-ம் ஆண்டு ரிலீஸான துள்ளுவதோ இளமை, அதை தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் செல்வராகவனுடன் இணைகிறார் தனுஷ்.
இப்போது அடுத்த சிக்கல். இந்தப் படத்தை தனது சொந்தப்பட தயாரிப்பு நிறுவனமான ‘ஒண்டர்பார் பிலிம்ஸ்’ சார்பில் தயாரிக்க போகிறாராம் தனுஷ்.
அதாவது, அடுத்த படத்தில் டிஸ்கவுன்ட் கொடுப்பது என்று கூறப்பட்டது, கஸ்தூரிராஜா படம் தயாரித்தால்தான். தனுஷ் தயாரிக்கும் படத்தில் அல்ல என்பதே இவரது ஸ்டான்ட். அதை எந்தளவுக்கு விநியோகஸ்தர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.
தனுஷ் ஏற்கனவே ‘ஒண்டர்பார் பிலிம்ஸ்’ பேனரில் ‘எதிர்நீச்சல்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். வெற்றிமாறனின் உதவியாளர் துரை செந்தில்குமார் டைரக்ட் செய்து வரும் அந்தப்படத்தில் சிவ கார்த்திகேயனும் பிரியா ஆனந்த்தும் நடிக்கிறார்கள். கொலவெறி மியூசிக் டைரக்டரும், தனுஷின் நண்பருமான அனிருத்தான் அந்தப் படத்துக்கும் இசையமைப்பாளர்.
அந்தப் படம் வியாபாரம் பேசப்பட்டபோது, எந்த விநியோகஸ்தரும் ‘3’ படத்தின் பழைய கதையை கிளறவில்லை. அதில் விட்ட காசுக்கு இதில் டிஸ்கவுன்ட் கேட்கவில்லை.
அந்த தைரியத்தில், அதே பேனரில், தொடர்ந்து இரண்டாவது படமாக செல்வராகவனின் டைரக்ஷனில் தான் நடிக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறாராம் தனுஷ்.
தந்திர HOP STEP & JUMP பிசினெஸ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக