சனி, 2 மார்ச், 2013

Delhi Rape சிறுவன் மீதும் கொலை வழக்கு பதிவு

புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவியை பலாத்காரப்படுத்தி கொலை செய்தது தொடர்பாக, சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிறுவர் நீதிமன்றத்தில், இந்த வழக்கில் கைதாகி உள்ள சிறுவன் மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவியை கடத்தி பலாத்காரப்படுத்தி கொலை செய்த வழக்கில், 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுவனை போலீசார் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இதையடுத்து சிறுவன் மீது  கொலை, பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 17 வயது சிறுவனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது, போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் நடப்பதற்கு முன் அவன் ஒரு வியாபாரியை வழிமறித்து பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்துள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கையிலும் சிறுவன், அந்த பெண்ணை பலாத்காரம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, சிறுவர் நீதிமன்ற மூத்த மாஜிஸ்திரேட் கீதாஞ்சலி கோயல் போலீசாருக்கு உத்தரவிட்டதன் பேரில், கைதாகி உள்ள சிறுவன் மீது கும்பலாக சேர்ந்து பலாத்காரம் செய்தது, கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. - dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக