வியாழன், 21 மார்ச், 2013

ஸ்டாலின் வீட்டில் சிபிஐ... பயத்தில் முலாயம்சிங் மாயாவதி போன்றோர்

டெல்லி: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் தான் மிகவும் அப்செட் ஆகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அரசு மிகவும் அப்செட்டாக உள்ளது. சிபிஐ சோதனை நடத்தப்பட்ட நேரம் பொருத்தமற்றது, தேவையற்றது, துரதிர்ஷ்டவசமானது. இதை அரசு செய்யவில்லை. இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றார் மன்மோகன் சிங்.இதேபோல நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், சிபிஐ சோதனையை நான் ஆதரிக்கவில்லை. இது வருத்தம் தருகிறது என்றார்.
அய்யா மன்மோகன் சிங்கையா சிபிஅய் சோதனை செய்த நேரம் பொருத்தம் அற்றது என்று தாங்கள் எப்படி கூறமுடியும்?
எந்த நேரம் உங்களுக்கும் உங்கள் காங்கிரஸ் மத்திய அரசுக்கும் பொருத்தமானது என்று நீங்கள் கருதும் சுதந்திரம் அதிகாரம் உங்களுக்கு இருப்பதை இப்படி ஒப்புதல் வாக்குமூலமாக இப்போதாவது உளறியதற்கு நன்றி,
ராசாவும் கனிமொழியும் உங்களுக்கு பொருத்தமான நேரத்தில் தான் சிறை சென்றார்கள் என்பது இப்போது வெளிச்சமாகி உள்ளது என்று எடுத்து கொள்ளல்லாமா?
முலாயம்சிங் மாயாவதி போன்றோர் உங்களின் பொருத்தமான நேரத்தின் பயத்தில் தான் உங்களுக்கு லோக் சபாவில் ஆதரவு கொடுக்கிறார்கள் என்று பலரும் பேசுவது கேட்கிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக