ஞாயிறு, 17 மார்ச், 2013

மிதி வெடிகளை அகற்றும் பணியில் ரஜனி என்ற இளம் தாய்

சர்வதேச மகளிர் தினத்தன்று இலங்கை உட்பட உலக நாடுகள் எங்கும் பெண்ணின் பெருமையை உயர்த்தக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. ரஜனி என்ற இந்த இளம் தாய் ஏ9 வீதியில் அன்றைய தினம் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, கடும் வெப்பத்தில் மற்றவர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக தன்னுயிரையே பணயமாக வைத்து மிதி வெடிகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். ரஜனி, பெண் குலத்திற்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ள புதுமைப் பெண் என்று நாம் கூறினால் தவறு இருக்கிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக