ஞாயிறு, 24 மார்ச், 2013

கலைஞர் எச்சரிக்கை: பழைய கதை தான் ஏற்படும் ?

பிரிவினை, பெரிய வினையாக மாறும்; பழைய கதை தான் ஏற்படும்
 தி.மு.க.,வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின், 23வது பொதுக்குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
இதில் திமுக தலைவர் கலைஞர் பேசியபோது,  ‘’ தொழிலாளர்கள் ஒற்றுமையாக, அரவணைக்கும் போக் குடன், அன்போடு நடந்து கொள்ள வேண்டும். இது, தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தி.மு.க., வின ருக்கும் சேர்த்துத் தான் சொல்லுகிறேன்.
பிரிவினை, பெரிய வினையாக மாறும்; பழைய கதை தான் ஏற்படும்’’என்று கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.  இனி இவர்கள் ஒற்றுமை படவேண்டுமென்றால் ஜெயலலிதா மீண்டும் ஏதாவது ஒரு அடாவடித்தனம் செய்தால் தான் உண்டு . முன்பும் கலைஞரை நடு இரவில் படுமோசமான முறையில் கைது செய்த பின்புதான் ஸ்டாலின் அழகிரி உறவு மீண்டும் துளிர்த்தது . இந்த முறையும்  இவர்களை ஒற்றுமை படுத்த அல்லது  காப்பாற்ற போயஸ் கார்டனில் இருந்து தான் கிரகம் வரவேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக