தி.மு.க. வெளியேறியதைத் தொடர்ந்து மத்திய அரசு கவிழுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்
இருந்து விலகுவதான சற்று நேரத்துக்கு முன், தி.மு.க. தலைவர் கருணாநிதி
அறிவித்தார்.
தி.மு.க. தலைவரின் அறிவிப்பை அடுத்து, உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது டில்லி.
லோக்சபாவில் மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை 540. அரசு நீடிப்பதற்கு 270 எம்.பிக்களின் ஆதரவு தேவை. தி.மு.க.வின் ஆதரவுடன் மொத்தம் 295 எம்.பிக்கள் ஆதரவு மத்திய அரசுக்கு இருந்தது. தற்போது திமுகவின் 18 எம்.பிக்கள் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கான ஆதரவு எம்.பிக்களின் எண்ணிக்கை 277ஆகக் குறைந்துள்ளது. அப்படிப் பார்த்தால், தி.மு.க. விலகியதால், ஆட்சி கவிழாது என்பது போல தோன்றலாம். ஆனால், இங்கு குறிப்பிடப்பட்ட 277 எம்.பி.க்களில், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜ்வாடி (22 ) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (21) எம்.பிக்களின் எண்ணிக்கையும் அடக்கம். அவர்கள் ஆட்சியில் பங்குபெறவில்லை. அமைச்சர்களாகவும் இல்லை. தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமோ, கமிட்மென்ட்டோ இல்லை. இதனால் டெக்னிகலாக சமாஜ்வாடி கட்சி, அல்லது பகுஜன் சமாஜ் கட்சி நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் ‘கவிழ்க்கப்பட’ கூடிய அரசாக மன்மோகன்சிங் அரசு மாறியிருக்கிறது. அவர்களை தூண்டிவிடவும் ஆள் இருக்கிறது என்பதே, மத்திய அரசுக்குள்ள உடனடி சவால்! ஏனென்றால், தி.மு.க. ஆதரவு இருந்தால், இவர்கள் இருவரையும் வெளியேற வைக்க வேண்டும்.கொஞ்சம் ‘அப்படியிப்படியான’ ரிலேஷன்ஷிப்பில் உள்ள இவர்களை ஒன்றாக வெளியேற்ற முடியாது. ஆனால் இப்போது, இந்த இரு தரப்பில் ஒரு தரப்பை இழுத்தால், சிங் அரசு கவிழும் என்பதால், அதற்கான முயற்சிகள் நடக்கும்! viruvirupu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக