திங்கள், 11 மார்ச், 2013

சிம்பு-ஹன்சிகா காதல்? கோலிவுட்டில் பரபரப்பு

சென்னை: சிம்பு-ஹன்சிகா காதல் வலையில் விழுந்திருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சிம்பு-நயன்தாரா சில வருடங்களுக்கு முன் நெருக்கமாக பழகி வந்தனர். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர்கள் உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் ‘தான் காதல் வலையில் விழுந்திருப்பதாகவும் கடந்த ஒரு வருடமாக ஒரு நடிகையுடன் நட்பு மலர்ந்திருக்கிறது. அவர் தமிழ் நடிகை அல்ல. உறுதியாகும் வரை தனது காதல் பற்றி எதையும் வெளிப்படையாக சொல்லப்போவதில்லை என்று சிம்பு கூறி வந்தார்.
இப்போது சிம்பு-ஹன்சிகா ஜோடியாக ஐதராபாத்தில் சுற்றி திரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருமே நெருக்கமான நட்புடன் பழகி வருகின்றனர். ஆனால் அதை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள் என்று திரையுலகில் பேசப்படுகிறது. இது பற்றி ஹன்சிகா கூறும்போது, ‘காதலனை தேர்வு செய்துவிட்டீர்களா என கேட்கிறார்கள். இது பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றார். தற்போது சிம்பு- ஹன்சிகா இருவரும் ‘வாலு, ‘வேட்டை மன்னன் ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக