புதன், 13 மார்ச், 2013

போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம்

A 70-year-old retired police officer has been sentenced to 10 years in jail by a fast track court for wrongfully detaining and raping a woman in a police station 15 years ago. விதவைப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம்: வழக்கில் அதிரடி தீர்ப்பு
டில்லியைச் சேர்ந்தவர், பரம்ஜித், 70. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், டில்லி ஜப்பார்பூர் கலான் பகுதியில், எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். அப்போது, டில்லியைச் சேர்ந்த, ஒரு விதவைப் பெண்ணை, போலீஸ் ஸ்டேஷனுக்கு, வலுக் கட்டாயமாக அழைத்து வந்து, பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார்.பாதிக்கப்பட்ட பெண், வழக்கு தொடர்ந்தார். டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின், பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் அனைத்தும், விரைவு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன. இதன்படி, இந்த வழக்கும், விரைவு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. விரைவு கோர்ட் நீதிபதி, வீரேந்திர பட் முன், இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, பரம்ஜித், "எனக்கு வயதாகி விட்டது. மற்றவர் உதவியின்றி, என்னால் செயல்பட முடியாது. எனவே, இந்த வழக்கில் எனக்கு கருணை காட்ட வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.இந்த வழக்கில் நீதிபதி 12.03.2013 தீர்ப்பளித்தார். தீர்ப்பில் அவர் கூறியதாவது: பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க, தற்போதுள்ள சட்டத்தில், போதிய அளவு கடுமையான தண்டனைகள் இல்லை. என்னை பொறுத்தவரை, இதுபோன்ற குற்றங்கள், மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டுமானால், சம்பந்தபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டியது, அவசியம்.இந்த வழக்கை விசாரித்த போலீசார், தங்களின் சக அதிகாரியை காப்பாற்றுவதற்காக, மிகவும் தரக்குறைவாக நடந்துள்ளனர். இது, கண்டிக்க தக்கது. விதவைப் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, வயதை காரணமாக வைத்து, கருணை காட்ட முடியாது.அவருக்கு, 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அவர் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக