சனி, 30 மார்ச், 2013

வறுமை காரணமாக குடும்பப் பெண்கள் லாட்ஜில்

வறுமை காரணமாக விபசாரத்தில் ஈடுபட்ட சோழவரம் பகுதியைச் சேர்ந்த 4 குடும்பப் பெண்கள் அங்குள்ள லாட்ஜில் கைது செய்யப்பட்டனர்.சோழவரத்தை அடுத்த ஜனப்பன் சத்திரம் கூட்ரோடு பகுதியில் லாட்ஜிகளில் விபசாரம் நடப்பதாக பொன்னேரி டி.எஸ்.பி. உஷா ராணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் சென்ற காவல்துறையினர் நடத்திய சோதனையில் 2 தங்கும் விடுதிகளில் விபசாரத்தில் ஈடுபட்ட 4 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.கொருக்குபேட்டை, புழல், செங்குன்றம் பகுதிகளை சேர்ந்த இவர்களிடம் போலீசார் விசாரித்த போது, அனைவரும் குடும்ப பெண்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, கணவர்கள் வேலைக்கு சென்ற பின் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வறுமை காரணமாக விபசாரத்தில் ஈடுபட்ட அந்த பெண்களை காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பெண்களுடன் விபசாரத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக