சனி, 30 மார்ச், 2013

தேர்தலுக்கு முன்னதாகவே வெடிக்கிறது! அழகிரியும் ஸ்டாலினும் மோதல்

கூட்டத்துக்குக் கூப்பிடலை’, 'என்னோட கோஷ்டிக்குப் பதவி தரலை’, 'மேடையில் சேர் போடலை’, 'அறிவாலயத்தில் அறை ஒதுக் கலை’.... என்று லோக்கல் காரணங் களைச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பி வந்த அழகிரியும் ஸ்டாலினும் இப்போது தங்களது எல்லையை உலக அளவுக்குப் பரப்பி இருக்கிறார் கள். இவர்களது குடும்பச் சண்டைக்கு, இலங்கைப் போரை ஊறுகாயாக மாற்றிவிட்டார்கள். ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தைத் திருத்தங்களுடன் கொண்டுவர வேண்டும் என்று திடீர் கோரிக்கையை மத்திய அரசின் முன் கருணாநிதி வைத்தார். இந்திய நாடாளுமன்றத்திலும் இப்படி ஒரு தீர்மானம் வரவேண்டும் என்றார். இப்படி அவர் கோரிக்கை வைப்பதற்கும் தீர்மானம் கொண்டுவருவதற்கும் இடையில் இரண்டே நாட்கள்தான் இருந்தன. காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளரை அறிவிப்பதற்கே கடைசி நிமிஷம் வரை டென்ஷனைத் தக்க வைக்கும் டெல்லி மேலிடம், இதில் மட்டும் உடனடியாகச் செயல்பட்டுவிடுமா? மன்மோகன்சிங் கவலைப்படவில்லை. எனவே, உடனடியாக தி.மு.க. அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, கூட்டணியை விட்டு வெளியேறுவதாக கருணாநிதி அறிவித்தார்.
ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு சிரிக்காமல் வந்திருக்க வேண்டிய அழகிரி, பிரதமரிடம் மனம்விட்டுப் பேசி இருக்கிறார். சோனியாவை வலியப் போய்ப் பார்த்திருக்கிறார். ஜி.கே.வாசன் வீட்டில் ஏராளமான கட்சிக்காரர்கள் காத்திருக்கிறார்கள் என்று தெரிந்தும் நெப்போலியனை அழைத்துச் சென்றுள்ளார். ப.சிதம்பரத்திடமும் சிரித்துப் பேசியிருக் கிறார். அதாவது, அமைச்சராக இருக்கும்போது யாரையெல்லாம் பார்க்கத் தவிர்த்தாரோ, அவர்களை வரிசையாய்ப் போய்ப் பார்த்துள்ளார் அழகிரி. டெல்லியில் வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று, மத்திய கேபினெட் அமைச்சர்கள் கூட்டம் நடக்கும். அதில் பல்வேறு விஷயங்கள் பரிமாறப்படும். முக்கியமான திட்டங் கள் அனைத்துக்கும் அப்போதுதான் ஒப்புதல் வாங்கப்படும். இந்தக் கூட்டங்களுக்குக் கூட ஒழுங்காகச் செல்லாதவர் அழகிரி. நாடாளுமன்றக் கூட்டங்களிலும் அவர் தலை தெரியாது. துறை சார்ந்த கேள்விகள் கிளம்பும்போது பதில் சொல்ல அவர் இருக்கமாட்டார். அப்படிப்பட்டவர் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் சென்று சந்தித்தது இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளது.
'கூட்டணியைவிட்டு தி.மு.க. விலகியதில் எனக்கு விருப்பம் இல்லை. நான் எப்போதும் காங்கிரஸ் ஆதரவாளன்தான்’ என்பதுதான் அழகிரியின் சிந்தனையாக உள்ளது. 'கூட்டணியைவிட்டு நாங்கள் வெளியில் வந்தாலும் காங்கிரஸுடனான எங்களது நட்பை யாரும் பிரிக்க முடியாது’ என்ற அர்த்தத்தில் அழகிரி அடித்த ஒரு கமென்ட் அவரது நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது. இது ஸ்டாலினுக்குத் தெரியவந்ததும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ''காங்கிரஸுடன் இனி கூட்டணியே கிடையாது'' என்று பகிரங்கமாக அறிவித் தார். பொதுவாக இதுபோன்ற கொள்கை அறிவிப்புகளை ஸ்டாலின் செய்வது இல்லை. மையமாகத்தான் எதனையும் பேசுவார். ''தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக் கும்'' என்றுதான் ஸ்டாலின் சொல்வார். அதற்கு மாறாக இறுதி முடிவு மாதிரி ஸ்டாலின் சொல்ல ஆரம்பித்திருப்பது அழகிரிக்காகத்தான்.
இதுவரை சொந்தப் பிரச்னைக்காக மோதிக் கொண்டு இருந்த அழகிரியும் ஸ்டாலினும் இப்போது கொள்கை அடிப்படையில் மோத ஆரம்பித்திருக்கிறார் கள். இந்த மனரீதியான பிளவு, கட்சி ரீதியான பிளவுக்கு அடித்தளம் அமைக் கிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இது வெடிக்கும்!
- முகுந்த் 
thanks vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக