வியாழன், 28 மார்ச், 2013

பிரிக்ஸ் வங்கி உலக வங்கியாக மாறும்

பீஜிங்:பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகியவை இணைந்து, அமைக்க உள்ள, "பிரிக்ஸ்' வங்கி, உலக வங்கியாக மாறும் வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள், கலந்து கொள்ளும், "பிரிக்ஸ்' மாநாடு, தென்ஆப்ரிக்காவின், டர்பன் நகரில் நடைபெறுகிறது.இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர், மன்மோகன் சிங்கும், சீனாவின் புதிய அதிபர், ஜி ஜின்பிங்கும், சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.இதுகுறித்து சீன ராணுவ அதிகாரி, ஹோங் லீ குறிப்பிடுகையில், ""இந்தியா - சீனா நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில், முன்னேற்றம் ஏற்பட வழிவகுக்கும்,'' என்றார்.""பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி, வருங்காலத்தில் உலக வங்கியாக மாறும் வாய்ப்பு உள்ளது,'' என, "கோல்ட்மேன் சாஷ் அசெட் மேனேஜ்மென்ட்' என்ற அமைப்பின் தலைவர், ஜிம் ஓநீல், தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் கூறியதாவது:பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகளின் வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட, பிரிக்ஸ் வங்கி உதவும். இந்நாடுகளின், பொருளாதார சாதனைகள், அவற்றின் அரசியல் சாதனைகளை விட, மிகப்பெரியவை.வரும், 2015க்குள், பிரிக்ஸ் வங்கியின் பொருளாதாரம், அமெரிக்க பொருளாதார அளவுக்கு அதிகரிக்கும். மேலும், 2027க்குள், "ஜி-7' நாடுகளின் பொருளாதார நிலைக்கு உயரும்.உலக வர்த்தகம் மற்றும் மற்றும் நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில், இவ்வங்கி பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்.இவ்வாறு, ஜிம் கூறினார்.   dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக