புதன், 27 மார்ச், 2013

மனைவி உயிரோடு எரித்து கொலை: கணவரும் பலி

ராஜபாளையம் மங்கா புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது40). இவரது மனைவி மாரியம்மாள் (வயது38). இருவருக்கும் திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. குடிப்பழக்கமுள்ள முருகன் அடிக்கடி மனைவி மாரியம் மாளுடன் தகராறு செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 24-ந்தேதியன்று முருகன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போதும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த முருகன் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து மாரியம்மாள் மீது ஊற்றி தீ வைத்தார்.வலியால் துடித்த மாரியம்மாள் அங்குமிங்கும் ஓடி அருகில் நின்று கொண்டு இருந்த முருகனை கட்டி பிடித்தார். இதனால் கணவன்-மனைவி இருவரும் தீயில் கருகினர். உடனே அக்கம் பக்கத்தி னர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மாரியம்மாளை ராஜபாளையம் அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த முருகன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிர் இழந்தார். இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசரணை நடத்தி வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக