சனி, 23 மார்ச், 2013

நயன்தாரா ஆர்யா வீட்டு விருந்து

ஆர்யாவும் நயன்தாராவும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். இப்போது வலை, ராஜா ராணி, படங்களிலும் இணைந்து நடிக்கிறார்கள். பிரபு தேவாவுடனான காதலை முறித்துவிட்டு நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததை ஆர்யா விருந்து வைத்து கொண்டாடியதாக கூறப்பட்டது.அப்போது நயன்தாராவை ஆர்யா தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு அவருக்கு ருசியான பிரியாணி விருந்து அளித்தார். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்று திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், இதை ஆர்யா மறுத்துள்ளார்.இது பற்றி அவரிடம் கேட்டபோது, எனது வீட்டில் அம்மா சுவையாக பிரியாணி சமைப்பார். நிறைய பேர் அதை சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்ததாக மற்றவர்களிடம் சொல்லி உள்ளனர்.
எனவே நிறைய பேர் பிரியாணி சாப்பிட ஆர்வமாக இருந்தார்கள். அவர்களுக்காக வீட்டில் விருந்து வைத்தேன். நயன்தாராவும் அந்த விருந்துக்கு வந்தார். மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களும் வந்து இருந்தார்கள். நயன்தாராவுக்கு மட்டும்தான் பிரியாணி விருந்து வைத்தேன் என்று வதந்தி பரப்பி விட்டார்கள். திருமணத்துக்கு நான் பெண் தேடுகிறேன். பொருத்தமான பெண் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக