வியாழன், 28 மார்ச், 2013

ஜெயலலிதாவுக்கு கச்சதீவு வேணுமா? கூடவே 842,323 இந்திய தமிழர்கள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கச்சத்தீவு வேண்டுமா? தாராளமாக கொடுக்கலாமே.. அதற்குமுன் ஒரு சிறிய கண்டிஷன் இருக்கிறது” என்று கூறியுள்ளார், இலங்கையின் புத்த மத அமைப்பான லக்பல சேனாவின் தலைவர் டாக்டர் சுதத் மல்லிக்காராச்சி.
“கண்டிஷன் என்னவென்றால், தற்போது இலங்கையில் (2011-ம் ஆண்டு ஜனத்தொகை கணிப்பீடு) மொத்தம் 842,323 இந்திய தமிழர்கள் உள்ளனர். இவர்களுக்கு இந்திய பிரஜாவுரிமை கொடுக்க முடியாது என்று இந்திய அரசு சொல்கிறது.
உங்கள் நாட்டவர்களான இவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள். அவர்களுடன் சேர்த்து கச்சதீவையும் கொடுத்து விடுகிறோம்” என்று கூறியுள்ளார், இவர்.
இந்த தமிழர்கள், பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தேயிலை தோட்டங்களில் பணிபுரிய கொண்டு செல்லப்பட்டவர்கள். (கிட்டத்தட்ட பாலாவின் ‘பரதேசி’ படக்கதைதான்)
இந்திய அரசாங்கம் இதற்கு விருப்பம் தெரிவித்தால், தாமதமின்றி அந்த நடவடிக்கைகளை எடுக்கவும். தேயிலை தோட்டங்களில் வேலைக்கு ஆட்கள் தேவையாக இருந்தால், தென் சீனாவின் யுவான் மாகாணத்தில் அல்லது வியட்நாம் அல்லது லாவேஸ் ஆகிய நாடுகளில் ஒன்றில் இருந்து பௌத்த மதத்தை சேர்ந்த யுவதிகளை இலங்கை அழைத்து வரும்” என்றும் மல்லிக்காராச்சி மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் இப்படியான பேச்சுக்கள் ஒலிப்பது, அங்குள்ள இந்திய தமிழர்களுக்கு நிச்சயம் ஆபத்தானது

Read more: viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக