புதன், 13 மார்ச், 2013

திருவனந்தபுரம், புனே விடுதிகளில் நெல்லை மாணவிகள் 4 பேர் பலாத்காரம்

நெல் லையில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேர் திருவனந்தபுரம், மும்பையில் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.நெல்லையை சேர்ந்த 4 மாணவிகள் அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர். அவர்கள் 4 பேரும் கடந்த 23ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு மற் றும் பல இடங்களில் தேடியும் மாணவிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன மாணவிகளுடன் பிளஸ்1 படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன்  மற்றும் டூட்டோரியலில் படிக்கும் 2 மாணவர்களும் உடன் சென்றது தெரியவந்தது.இவர்களில் ஒரு மாணவி வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை எடுத்து சென் றார். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரயிலில் மும்பை சென்றுள்ளனர். பின்னர் புனே சென்றனர். தகவல் அறிந்து தனிப்படை போலீசார் புனே சென்று அவர்களை மீட்டு, நெல்லை குற்றவியல் முதலாம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி 4 மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இதில் 4 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப் பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.திருவனந்தபுரத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள் அங்கு லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர். இதையறிந்த ரவுடி கும்பல் மாணவிகளை மிரட்டி அவர் களை பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் மும்பை சென்றபோது அங்கும் ஒரு கும்பல் அவர் களை பலாத்காரம் செய்துள்ளது. இதற்கு அவர்களுடன் சென்ற மாணவர்கள் உடந்தையாக இருந் துள்ளனர். இதில் 2 மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் உடனடியாக லாட்ஜ் மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் புனேயில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவ, மாணவிகள் 7 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப் படுகின்றனர். மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக