வெள்ளி, 1 மார்ச், 2013

அழகன் அழகி 32 மாவட்டங்களிலிருந்து 32 நடிகர், நடிகைகள் நடிக்கும் பட

சென்னை: 32 மாவட்டங்களிலிருந்து 32 நடிகர், நடிகைகள் நடிக்கும் படமாக உருவாகிறது ‘அழகன் அழகி’ இதுபற்றி பட இயக்குனர் நந்தா பெரியசாமி கூறும்போது,‘நேர்மையும் துணிவும் கொண்ட ஆண், முயற்சியும் முனைப்பும் கொண்ட பெண் என இருவர் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு தேர்வாகின்றனர். அதன் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் 32 ஆண், பெண் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இது கிராமத்தில் நடக்கும் நகரத்து கதை, வடக்கே சென்னையில் தொடங்கி தெற்கே காரைக்குடியில் முடிகிறது. ஹீரோ ஜோ. ஹீரோயின் ஆருசி. இவர்களுடன் ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஜெகன், ஆர்த்தி, சாம்ஸ் நடிக்கின்றனர். பாடல் காட்சி ஒன்றில் மும்பை அழகிகளுடன் ஆட்டம்போடுகிறார் பவர் ஸ்டார். சென்னை, வத்தலகுண்டு, மணப்பாடு, ராமநாதபுரம் என பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு வட்டார வழக்கு, கலாசாரம் பதிவு செய்யப்படுகின்றன. பிரபு தயாளன் ஒளிப்பதிவு. கண்ணன் இசை. தயாரிப்பு விசு, விஜி’ என்றார்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக