ஞாயிறு, 24 மார்ச், 2013

மியான்மரில் மீண்டும் மதக் கலவரம் மக்கள் பீதியில்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மெய்க்டிலா: மியான்மரில் புத்த மதத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் 20 பேர் அடித்து கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மியான்மரின் மத்திய பகுதியில் புத்த மதத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் வீடுகளுக்கு தீ வைத்தனர். கடைகளை சூறையாடினர். இதனால் மக்கள் பீதியில் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி சென்றனர். பலர் வீடுகளை விட்டு வெளியில் வரவில்லை. இந்த மோதலில் 2 நாளில் மட்டும் 20 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அதை அணைக்க வந்த தீயணைப்பு துறையினரையும் அதிகாரிகளையும் புத்த மதத்தினர் தடுத்து விரட்டியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கலவர பகுதிகளில் உடனடியாக உள்ளூர் போலீசாரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு மியான்மரின் மேற்கு பகுதியில் உள்ள ரெகைன் என்ற பகுதியில் இதேபோல் மதக் கலவரம் வெடித்தது. அப்போது 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக