வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் சினிமா பிரபலங்கள் U Turn அடித்து ஜெயலலிதாவுக்கு ஆதரவு

புரட்சித் தலைவி, முதல்வர் அம்மாவுக்கு நன்றி நன்றி!' - கமல் சார்பில் சிவகுமார், ராதிகா

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர் சிவகுமார், ராதிகா உள்ளிட்ட சினிமாக்காரர்கள்.கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த சூழலில், இன்று கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு, அவரது அலுவலகத்தில் கூடினர் சினிமா பிரபலங்கள் பலரும்.
அவர்கள் இந்தத் தடை, கமலுக்கு தங்களின் ஆதரவை எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தபோதே, முதல்வர் ஜெயலலிதாவின் பேட்டி வெளியாகிவிட்டது.இஸ்லாமிய அமைப்பினருடன் கமல் சமரசமாகப் போய்விட்டால், படத்தை வெளியிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று முதல்வர் கூறியிருந்தார். இதைக் கேட்டவுடன் ரசிகர்கள் வெளியில் கொண்டாட ஆரம்பித்தனர்.இதைத் தொடர்ந்து வந்திருந்த அத்தனை பிரபலங்களும் அப்படியே யு டர்ன் அடித்து, முதல்வருக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்தனர்.முதலில் பேட்டியளித்த நடிகை ராதிகா, "தமிழக முதல்வர், புரட்சித்தலைவரி மாண்புமிகு அம்மா அவர்களின் அறிவிப்பின் மூலம் விஸ்வரூபம் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரது உள்ளம் கலையுலகினருக்காக எப்போதுமே இரக்கப்படும். அதனால்தான் சுமூகத் தீர்வுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறியுள்ளார். முதல்வருக்கு எங்கள் திரையுலகமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.மும்பையில் இருக்கும் கமல்ஹாசனிடம் இந்தத் தகவலை தெரிவித்துவிட்டோம். இஸ்லாமிய அமைப்புகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணப்படும். இதற்கான முயற்சிகளில் உடனடியாக இறங்குகிறோம்," என்றார்.நடிகர் சிவகுமார் பேசுகையில், "முதல்வர் புரட்சித்தலைவிக்கு கமல் சார்பில் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். விரைவில் கமல்ஹாஸன் வந்துவிடுவார். இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி பிரச்சினையை முடித்துவிடுவோம். முதல்வருக்கு மீண்டும் நன்றி," என்றார்.விரைவில் முதல்வரை நேரில் சந்தித்து கமல் நன்றி கூறுவார் என்றும் சிவகுமார் தெரிவித்தார். விரைவில் கமுநிஸ்ட் பாண்டியன் தலைமையில் அம்மாவின் சகல ஜால்ராக்களும் விஸ்வரூபத்திற்கு மிகப்பெரும் விளம்பரத்தை மிகுந்த மதி நுட்பத்துடன் ஏற்பாடு செய்து தமிழ்நாட்டை வழிநடத்திய இதய தெய்வம் புரட்சி தலைவி அமாவுக்கு  விழா எடுப்பார்கள் வழக்கமான செட் புரோபெட்டிகள் மட்டும் அல்லாது ரஜினி வகையறாக்களும் கலந்து கொள்ள கூடிய சாத்தியமும் உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக