ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

Maldives இந்திய ஆசிரியை பலாத்காரம் மாலத்தீவில் 3 பேர் கைது

 A 24-year-old Indian computer teacher was brutally raped in Maldives and is in “very serious condition”, prompting India to take up the matter with Maldivian government. The young Indian teacher working on the island of Dhangethi in Alif Dhaal Atoll has been hospitalised after a group of people broke into her home on Sunday night and allegedly raped her, Minivan News reported
மாலத்தீவில் இந்திய ஆசிரியை பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மாலத்தீவின் அலிப்தால் அடோல் தங்கேதி என்ற இடத்தில், இந்திய கம்ப்யூட்டர் ஆசிரியை ஒருவர் கடந்த 11ம் தேதி வீட்டில் மர்ம கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்ற போது, அங்கு ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் ஆசிரியை இருந்தார். இதுதொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர், மாலத்தீவை சேர்ந்த 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து குற்றப்பிரிவு தலைவர் முகமது தாவூத் கூறியதாவது: இந்திய ஆசிரியையை ஒரு கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது.
அவர் அடோல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலாத்காரம் நடந்த பின், மாலத்தீவில் இருந்து வெளியில் செல்லும் எல்லா படகுகள், கப்பல்களில் தீவிர சோதனை நடத்தினோம். அப்போது மாலத்தீவை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தோம். அவர்கள் அளித்த தகவலின்படி வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தோம். அவரிடம் இருந்து ஆசிரியையின் லேப்டாப், செல்போன், பணம் ஆகியவற்றை மீட்டோம். இவர்கள் 3 பேரும் கத்திமுனையில் ஆசிரியையை பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முகமது தாவூத் கூறினார்.  tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக