பான்டிங்கை மும்பை இந்தியன்ஸ் தவிர வேறு யாரும் ஏலம் கேட்கவில்லை. மைக்கேல் கிளார்க்கை ரூ.2.12 கோடிக்கு புனே அணி வாங்கியுள்ளது. தென்ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் ஜோகன் போத்தா, இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் இருவருக்கும் அடிப்படை விலையாக தலா ரூ.53.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.3 கோடிக்கு வாங்கப்பட்ட ஆர்.பி.சிங் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடாததால் அவர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரை மிகுந்த எதிர்பார்ப்புடன் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ரூ.2.12 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஜோகன் போத்தா, 2.39 கோடிக்கு ஏலம் போனார். அவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியுள்ளது. மன்பீரித் கோனி, அபிஷேக் நாயர், சுதீப் தியாகி, ஜெ.உனத்காட், வாசிம் ஜாபர் பங்கஜ் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்களும் ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ்க்கு அடிப்படை விலையாக ரூ.1.6 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரை யாரும் ஏலம் கேட்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமிக்கு அடிப்படை விலையாக ரூ. 53.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர் சிறந்த ஆல் ரவுண்டர் என்பதால் இவரை ஒப்பந்தம் செய்யவும் அணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டின. இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிசை வாங்க டெல்லி டேர் டெவில்ஸ் திட்டமிட்டுள்ளது. நட்சத்திர வீரர்கள் அதிகளவில் பட்டியலில் இடம் பெறாததால் ஏலம் மந்தமாக இருந்தது. தொடர்ந்து ஏலம் நடந்து வருகிறது.tamilmurasu.org
திங்கள், 4 பிப்ரவரி, 2013
IPL வீரர்களை ஏலவிற்பனையில் வாங்க கடும் போட்டி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக