செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு ரயிலில் வந்த பெண்ணின் பிணம்

டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் ஒன்றில் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட ஒரு பெண்ணின் பிணம் இருந்தது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி ரயில் நிலையத்திற்கு ஞாயிறு இரவு அரியானா மாநிலம் பானிபட்டிலிருந்து வந்த ரயிலின் இருக்கைக்கு அடியில் பிளாஸ்டிக் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 வயதுடைய ஒரு பெண்ணின் பிணம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது .>அந்த பெண்ணின் கைகள், கால்கள், கழுத்துடன் இணைத்து பிளாஸ்டிக் க‌யிரா‌ல் சுற்றப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி லோக்நாயக் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். கொல்லப்பட்ட அந்த பெண் யார், கொலை ரயிலில் நடந்ததா போன்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.மருத்துவ மாணவி கற்பழிப்பு, போலீஸ் உதவி மையத்திற்கு எதிரே பீன் சுட்டு கொலை போன்ற சம்பவங்களை தொடர்ந்து டெல்லி ரயிலில் ஒரு பெண்ணின் பிணம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகின்றன  tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக