வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

இளையராஜா குடும்பத்தில் யுவன் ஷங்கா் ராஜாவின் திருமணமே எடுத்துக்காட்டு” -வாலி

Viruvirupu
காதலுக்கு ஆதரவா? பா.ம.க.வுக்கு எதிர்ப்பா?
காதலுக்கு ஆதரவா? பா.ம.க.வுக்கு எதிர்ப்பா?
“காதலுக்கு ஜாதி இல்லை என்பதற்கு, என் குடும்பத்திலும், இளையராஜா குடும்பத்திலும் நடந்த திருமணங்களே எடுத்துக்காட்டு” என்று பேசினார் சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி.
காதலர் தினத்தை முன்னிட்டு சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில், ‘வன்மத்தில் கறைபடுமோ காதல்’’ என்ற தலைப்பில், திறந்தவெளி கவியரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. கவியரங்கத்திற்கு தலைமை வகித்து கவிஞர் வாலி பேசியபோதே அவ்வாறு குறிப்பிட்டார்.
கவிஞர் வாலி பேசியபோது, “காதல் திருமணத்தால் தான், ஜாதி ஒழிக்க முடியும். நானும் காதல் திருமணம் செய்தவன்தான். காதல் எதிர்ப்பு என்பது, அர்த்தமற்ற செயல். இஷ்டப்பட்டு கஷ்டப்படுவதுதான், காதல். உடல் கவர்ச்சியில் வருவது, காதல் அல்ல; ஆன்மாவை தொடுவது தான், காதல்.
என் அண்ணனின் மகள், ஒரு பையனை காதலித்தாள். அண்ணன் குடும்பத்தினர், காதலை எதிர்த்தனர். அந்த பையன் என்னிடம் வந்து, “நீங்கள் தான் எங்கள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்’” என்றான்.
“அந்த பையன், நல்ல பையனாக இருக்கும்போது, ஏன் எதிர்க்க வேண்டும்?” என, அண்ணனிடம் கேட்டேன். ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து, அந்த திருமணத்தை, நான் தான் நடத்தி வைத்தேன்.
இன்னொரு திருமணத்தில், மணப்பெண், பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். மணமகன் யார் என்றால், இளையராஜா மகன் யுவன் சங்கர்ராஜா. இளையராஜா என்ன ஜாதி என, எல்லாருக்கும் தெரியும். காதலுக்கு ஜாதி இல்லை என்பதற்கு, என் குடும்பத்திலும், இளையராஜா குடும்பத்திலும் நடந்த திருமணங்களே எடுத்துக்காட்டு” என்றார்.
நம்ம டாக்டர் ஐயாவுக்கு பி.பி.யை ரத்த அழுத்தத்தை எகிற வைப்பதுபோல ஏங்க எல்லோரும் கருத்து சொல்றீங்க?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக