சனி, 16 பிப்ரவரி, 2013

திருஞானசம்பந் தர் நிகழ்த்திய அற்புதங்கள் என்பவை யெல்லாம் கற்பனையே

திருஞான சம்பந்தர் அற்புதங்களும் சேக்கிழாரின் பெரிய புராணமும்

வரலாறும், உண்மையும் இடறுகிறது 2
முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
இவ்வாறு அனல்வாதம், புனல்வாதம் முடிந்து சமணர்கள் தோற்றதாகக் கூறிக் கழுவேற்றுதல் நடைபெறும். கழுவேற்று தல் என்பது சவுக்குக் கட்டைகளை கட்டப்பட்டிருக்கும். சமணர்கள் அதில் ஏறி உட்கார்ந்து கையில் துணியால் தைத்த சிறு நாக்கு போன்ற ஒன்றை வாயில் திணிப்பார்கள். இந்த வேடிக்கை ஆண்டுதோறும் நடைபெற்றாலும், இளம் வயதில் ஆரிய சூழ்ச்சியையெல்லாம் புரிந்துகொள்ளும் பக்குவம்  எனக்குக் கிடையாது. வேடிக்கை பார்ப்பதோடு சரி.திருமயிலைக் கபாலீச்சரம் திருக் கோயிலில் கபாலீச்சுரர் சன்னிதி நுழை யும் வாயிலருகில் காசி மடம் குமர குருபர சுவாமிகள் கல்லில் திருஞான சம்பந்தர் பாடிய அங்கம் பூம்பாவாய் பாடல் செதுக்கி வைத்துள்ளதைக் காண்பது உண்டு. அதுபோல் மேற்கு வாயில் அரு கில் திருஞானசம்பந்தர் சாம்பலிலிருந்து எழுப்பிய பூம்பாவைக்கு ஒரு சிறிய சன்னிதி சில ஆண்டுகளுக்குள் எழுப்பி யது கொடி மரத்தின் எதிரே காணப் படுகிறது.இவற்றைக் காணும்போதும், தேவாரப் பாடல்களை ஆராயும்போதும் திருஞான சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்துத் தேவாரப் பாடல்களில் குறிப் புகள் ஏதும், அங்கம் பூம்பாவையை எழுப் பியது உட்படச் சான்றுகள் இல்லாமை யைக் கண்ணுற நேர்ந்தது.அப்படியானால் திருஞானம்சம்பந்தர் இவ்வாறு பல அற்புதங்களை நிகழ்த் தினார் எனும் கற்பனைக் கதை பரவியது எப்படி?
மறைந்த பேராசிரியர் என் அன்பு நண்பர் கு. நம்பி ஆரூரன்  தம்முடைய எம்.லிட் பட்ட ஆய்விற்காகப் பெரிய புராணம் கூறும் சமூகப் பொருளாதாரக் கோட்பாடுகள் எனும் ஆய்வினை மேற் கொண்டு ஆய்வேட்டினை, சென்னைப் பல்கலைக் கழகத்தில் அளித்துள்ளார். அடுத்து பேராசிரியர் இராசமாணிக் கனார் பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலினை எழுதியுள்ளார்.

மேலும் பல்லவர் வரலாறு எனும் அவர்தம் நூலில் சுந்தரர் வழக்கு குறித்துப் பெரிய புராணம் கூறுவனவற்றை எடுத்துக் கூறியிருந்தார். எனவே பெரிய புராணம்தான் இவ்வா றான அற்புதங்கள் செய்தார் எனும் கற் பனைச் செய்தி பரவியதற்குக் காரணம் என்பது தெளிவாகிறது.

புராணங்கள் - அவை கந்தபுராணமா யினும் சரி, சேக்கிழாரின் பெரியபுராண மானலும் சரி, அவை கற்பனையே என்ப தோடு மிகைப்படுத்தப்பட்ட - இன்னும் சொல்லப் போனால் புளுகுச் செய்தி களுக்குத் தமிழ்ப் புனுகு சாத்தப்பட் டவையே.

சேக்கிழாரின் தமிழைப் போற்றுகி றோம். சேக்கிழார் தமிழர் என்பதால், ஆரியப் புலவர் அல்லர் என்பதால் மதிக் கிறோம். போற்றவும்கூட செய்கிறோம் ஆனால் இதுபோன்ற கற்பனைக் கதையை உலவவிட்டதை ஏற்கவியலாது என்பது பகுத்தறிவாளர் கருத்து. அது கம்பரின் இராமாயணத்திற்குக் கூறப்பட்ட எதிர்ப்புப் போலவே பெரியபுராணத்திற்கும் கூறப்படும் எதிர்ப்பு, மறுப்பு எல்லாம் ஆகும்.

வைணவத்திற்குக் கற்பனை வழங் கியவன் கம்பன். அதே காலகட்டத்தில் சைவத்திற்குக் கற்பனை வழங்கியவர் சேக்கிழார்.

இந்நிலையில்  1929இல் இன்றைக்கு எண்பது ஆண்டுகளுக்குமுன் இராசரத் தினம் என்பவர் எழுதிய பெரிய புராணம் கூறிய,  தேவாரத்தில் இல்லாத கற்பனை கள், கப்சாக்கள் குறித்த செய்திகள் காணப்பட்டன.

அதுவே மேலும் நம் ஆர்வத்தைத் தூண்டி திருஞானசம்பந் தர் நிகழ்த்திய அற்புதங்கள் என்பவை யெல்லாம் கற்பனையே, சேக்கிழார் பக்தியை வளர்க்க, தம் பக்திப் பெருமையை வெளிக்காட்ட  தெய்வப் புலவர் என்று அழைக்கத்தக்க அளவில் பல கற்பனை, புளுகுகள், நம்ப முடியாத வற்றை எழுதி வைத்துவிட்டார்.

நல்ல வேளையாகத் தேவாரப் பாடல் கள் இராஜராஜசோழன் முயற்சியால் கிடைத்துள்ளன. அவற்றில் திருஞான சம்பந்தர் அற்புதங்கள் செய்தார் என்று காட்டுவதாக இல்லை. இன்னும் ஆலயங் கள் சென்று வருகின்ற என்போன்ற ஆய்வாளர்கள் அவற்றை எடுத்துக் காட்டிட வேண்டும்.

எனவே பக்தி மடம் கொண்டவர்கள் எங்களைப் போன்றவர்களைக் கட்டுச் சோற்றுக்குள் எலி என்று எண்ணிக் கொண்டாலும் சரி, கலைஞர் பராசக்தி யில் கூறியதுபோல் பக்தி பகல் வேஷமாகி விடக் கூடாது. உண்மையான பக்தி பலன் கருதாப் பக்தியாக மறைமலையடிகள், திரு.வி.க. காட்டிய வழியில் அமைதல் வேண்டும்.

பெரிய புராணமும் - தேவாரமும்

தமிழ் வேதம் என்று சொல்லப்பட்ட தேவாரப் பாடல்களைப் பாடியவர்கள் மூவர் - திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரமூர்த்தி. இவர்கள் மூவரும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் அடங்குவர். இவர்களைக் குறித்துக் கூறவந்த பெரிய புராணம் இவர்கள் மூவருமே  அற்புதங்கள் நிகழ்த்தினர் என்று கூறுகிறது.

இக்கூற்றுகளுக்குச் சான்றாக காலத் தால் முந்திய ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த எந்தத் தேவாரப் பாடல்களிலும் கிடைக்கவில்லை. சேக்கிழார், தேவாரப் பாடல்கள் தோன்றிய சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குப்பின் குன்றத்தூரில் பிறந்து சிதம்பரத்தில் பெரிய புராணம் அரங்கேற்றினார் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு பெரிய புராணம் இயற்றுகையில் நாட்டில் வழங்கும் கதைகளைக் கொண் டும், தேவாரப் பாடல்களில் வழங்கும் சில சொற்களின் போக்கைக் கொண்டும், சேக்கிழார் திரிபுணர்வினால் - மூவர்கள் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகக் கூறுகின்றனர்.

இதே போன்று எந்நாட்டிலும் பெரியோராயிருந்தோர்களை, பிற்காலத் தவர் சிறப்பாகக் கொள்ளுமாறு, அவரைப் புகழ்ந்தோரும், சார்ந்தோரும் மிகைப்படக் கூறி, அவதார புருஷர் களாக ஆக்குவது வழக்கமாகக் காணப் படுகிறது.

அவ்வாறே உலகத்திற்கு நீதி போதிக்க வந்த யேசு கிறித்துவை பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகக் கூறு வதும் ஏற்றதே.

ஏன், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கலையுரைத்த கற்பனை யெல்லாம் மண் மூடிப் போக என்று பாடிய வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகள் அற்புதங்கள் செய்ததாகச் சில ரும், அதை மறுக்கப் பலரும் தோன்றி யதும், வழக்காடியதும் நிகழ்ந்துள்ளன.

தந்தை பெரியார் இராமலிங்கர் பொன் மொழிகள் என்று விடுதலையில் ஒரு பக்கத்திற்கும் மேலாகத் தொகுத்து கட்டுரை ஒன்று வரைந்துள்ளார்.  இராமலிங்கர் பொன்மொழிகளை பெரியார் தொகுத்துக் கூறியதன் நோக்கம் - பொய் தோன்றிய காலத்துச் செல்வாக்குப் பெறவில்லையென்ற போதிலும், மேலும் மேலும் வற்புறுத்திக் கூறுவதினாலும், நாளடைவில் அதனை மறுப்பவரின்றி மெய்யாக ஆகிவிடக் கூடாது என்பதால்தான்.

பின்வருவோர் பொய்யை ஏட்டில், எழுத்தில் கண்டால் கடவுள் வாக்கு அது; என்றும் மாறாத சத்தியம், உண்மை என்று எண்ணி மயங்கிட நேரிடுகிறது. மூவர் செய்த அற்புதங்கள் எல்லாம் அவ்வாறேதான் மாறியுள்ளன. இதுபோல் வைணத்தில் அதிகமில்லையெனினும் பன்னிரு ஆழ்வார்களில் ஓரிருவர் இதுபோல் அற்புதங்கள் நிகழ்த்தியதாக அல்லது அவர்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக