ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

மோடியின் வாக்கு மூலம் ஏன் இரகசிய மாக வைக்கப்பட்டது?

குஜராத்தில் 2002இல் நடைபெற்ற கலவரம் துரதிருஷ்டமானது என்று குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டுள் ளது. இரகசியமாக வைக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து வெளி யில் சொல்லியுள்ளார் ஜெர்மன் தூதர் மைக்கல் ஸ்டைனர்.
2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரங் கள் துரதிருஷ்ட மானவை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்ததாக ஜெர்மன் தூதர் மைக்கல் ஸ்டைனர் கூறியிருக் கிறார்.
புதுடில்லியில் கடந்த மாதம் 7-ஆம் தேதி ஜெர்மன் தூதரகத்தில் நடைபெற்ற விருந்தில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பல நாடுகளின் தூதர்கள் கலந்துகொண் டனர். அந்த விருந்தில் கலந்துகொள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டி ருந்தார். இதன் மூலம் அய்ரோப்பிய நாடுகளுக்கு மோடி மீது இது வரை இருந்துவந்த நிலைப் பாடு தளர்ந்துள்ளது என்று அரசியல் நோக் கர்கள் கருதுகின்றனரோ என்னவோ!
ஜெர்மன் தூதர் அளித்த விருந்து பற்றி வெளியில் எவருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மோடி யுடன் அப்படியொரு விருந்து-சந்திப்பு நடைபெற்ற தகவலை ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தூதர் ஜோ கிரவின்யோ வியாழக் கிழமை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, புது தில்லியில் வெள்ளிக் கிழமை சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார் ஜெர்மன் தூதர் ஸ்டை னர். அப்போது கடந்த மாதம் தமது தூதரகத் தில் நடைபெற்ற விருந்து- சந்திப்பு குறித்து விவரங்களை வெளியிட் டார். அவர் கூறியதாவது:

குஜராத் பேரவைத் தேர்தலில் ஜெர்மனி தலை யிட விரும்பியதில்லை. தேர்தல் நடந்து முடிந்த பின்பு அந்த மாநில விவகாரங்களை மறுபரி சீலனை செய்வதாக இருந்தோம். அதைத் தான் இப்போது செய் கிறோம். முதல்வர் மோடி யிடம் நேரடியாகப் பேசு வதும் அதில் அடங்கும்.
சந்திப்பின்போது கூடியிருந்த தூதர்களி டம் குஜராத் கலவரங் கள் மிகவும் துரதிருஷ் டவசமானது என்றும், இதுபோன்ற சம்ப வங்கள் நடப்பது தவிர்க் கப்பட வேண்டுமென் றும் நீதித் துறை அளிக்கும் தீர்ப்பு களுக்குத் தாம் கட்டுப் படுவதாகவும் நரேந்திர மோடி தெரிவித்தார்.  (நீதித்துறைதான் மோடியை நீரோ மன் னன் என்று கூறி விட்டதே!)
இந்தியா ஒரு ஜன நாயக நாடு. ஜனநாயக அமைப்புகளை நாங்கள் மதிக்கிறோம். இந்த நாட்டின் நீதித் துறை மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். இந்த மரியாதை-நம்பிக்கையினால் இப்போது ஒரு புதிய சகாப்தத்தில் இருக் கிறோம்.
இந்திய நீதித்துறை மெதுவாகச் செயல் படக்கூடியதாக இருக் கலாம். ஆனால் அது எப்போதும் சரியான முடிவுகளைத் தருகிறது.
முன்பு நடைபெற்ற மிக மிகத் துயரமான சம்பவத்தின் ஒரு பகுதி சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது என்று ஜெர்மன் தூதர் கூறினார். நரோடா பாட்டியா வழக்கில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் குற்ற வாளிகள் என்று தீர்ப் பளிக்கப்பட்டதையே அவர் அவ்வாறு குறிப் பிட்டார்.
மேற்கொண்டு அந்த விருந்து-சந்திப்பில் நடைபெற்ற எதையும் அவர் வெளியிட மறுத்து விட்டார்.
குறிப்பு: ஒரு மாதம் ஓடியதற்குப் பிறகு மோடியின் வாக்கு மூலம் ஏன் இரகசிய மாக வைக்கப்பட்டது. இப்பொழுது ஏன் வெளிப் படுத்தப்படுகிறது? என்பது முக்கியம்.
பிரதமருக்கான வேட் பாளராக பி.ஜே.பி.யால் அறிவிக்கப்பட இது பயன்படும் என்று நினைத்து வெளியிடப் பட்டு இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக