திங்கள், 11 பிப்ரவரி, 2013

கும்ப மேளா முடிந்து திரும்பும்போது, ரயில் நிலைய நடைமேடை உடைந்து 20 பேர் பலி!

அலகாபாத் ரயில் நிலையத்தில் கும்ப மேளா மௌனி அமாவாஸ்யை மகாஸ்நானம் முடிந்து இன்று ஊர் திரும்பியவர்கள் ரயில் நிலைய நடைமேடையில் நெரிசலாக கொண்டிருந்த போது, பாரம் தாங்காமல் அந்த நடைமேடை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான மகா கும்ப மேளாவில் இன்று கூட்டநெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியான அதிர்ச்சி நீங்கும் முன்னரே, அலகாபாத் ரயில் நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கும்பமேளா முடிந்து சொந்த ஊர் திரும்புவதற்காக ஏராளமானோர் அங்குள்ள ரயில் நிலையத்திற்கு சென்றனர். அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கானோர் சென்றதால் எடை தாங்காமல் பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

எத்தனைபேர் உயிரிழந்தனர் என்ற முழு விபரம் தெரியவில்லை. அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள், 20 பேராவது இறந்திருக்கலாம் என்பதாக உள்ளது. இந்த சம்பவத்தால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கும்ப மேளா மௌனி அமாவாஸ்யை மகாஸ்நானம் முடிந்து லட்சக்கணக்கான மக்கள் ஊர் திரும்புவார்கள் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், அலகாபாத் ரயில் நிலையத்தில் ஒரேயோரு டாக்டர்தான் பணியில் இருந்துள்ளார் viruppu,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக