புதன், 2 ஜனவரி, 2013

Tamilnadu நாளும் பெண்கள் மீதான வன்கொடுமை அரங்கேற்றம்!


அரசுக்கு உயர்நீதிமன்றம் தாக்கீது! திருமண உதவி திட்ட நிதி உயர்நீதிமன்றம் உத்தரவு" வேலூர், டிச. 29- தூத்துக்குடி மாவட்டம், திருவை குண்டத்தில் 13 வயது சிறுமி புனிதா வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஈரம் காய்வ தற்குள் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட மற்றொரு சம்பவம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடந் திருக்கின்றது.
அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி, நாகை, விருத் தாசலம், சிதம்பரம் என காமுகர்களின் களியாட்டத் தில் தமிழகம் திளைத்திருக்கிறது. அடுத்து என்ன நடக்குமோ என்று தாய்மார்கள், பெற்றோர்கள் செய்வதறியாது தவித்திருக்கிறார்கள்.
டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி பேருந் தினுள் 6  கயவர்களால் சின்னாபின்னமாக்கப்பட்டு தற்போது  சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர் இழந்தார் என்பது வேதனை! இச்சம்பவத்தை இந்தியாவில் அனைத்து மாநில பத்திரிகைகளும், பெரும் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத் திலும் அனைத்து நாளேடுகளும், ஊடகங்களும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.
ஆனால் தமிழகத்தில், தினமும் ஒரு வன் கொடுமை - கொலை நடக்கிறது என்று சொல்லக் கூடிய அளவிற்கு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம்,  திருவைகுண்டத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி - சிறுமி - பள்ளிக்குச் செல்லும் வழியில் மனித மிருகத்தால் வேட்டையாடப்பட்டு, சின்னாபின்னமாகி - கொலை செய்யப்பட்டார். இந்த பரிதாப சம்ப வத்தை தமிழகத்தில் எத்தனை ஊடகங்கள், பத்திரி கைகள் வெளியிட்டுள்ளன என்றால் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றது.
சிறுமி புனிதாவின் மரணத்திற்கு அ.தி.மு.க. அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வன் கொடு மையைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.பி.சற் குணபாண்டியன் தலைமையில் கவிஞர் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   பாலியல் கொடுமை யால் பலியான மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில், ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
விருத்தாசலம் அருகே
அச்சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே இளம் பெண் ஒருவர், தான் மணக்க இருக்கும் முறைப் பைய னுடன் மணிமுத்தாறு ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தபொழுது, 6 பேர் அப்பெண்னை வன்புணர்ச்சி செய்தனர். அவர் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் நாகையில் வேலைக்குச் சென்று திரும்பிய இளம் பெண் விமலா கெடுக்கப்பட்டு கொலை செய்து ரயிலில் பிணத்தை வீசி எறிந்து உள்ளனர்.
மேலும் சிதம்பரம் மஞ்சகுப்பம் கிராமத்தில்  21 வயது இளம் பெண் சந்தியா பாலியல் பலத்காரத் திற்குள்ளாகி படுகொலை  செய்யப்பட்டு இருப்ப தோடு நேற்று தூத்துக்குடி யில் 27 வயது பெண் மழைக்காக ஒரு வீட்டில் ஒதுங்கிய பொழுது பாலியல் வன்கொடுமைக்காளாகியுள்ளார்.
இச்சம்பவங்களில் இருந்து தமிழகம் மீள்வ தற்குள் மற்றொரு சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை குலுக்கியுள்ளது. ஆனால் தமிழக முதல மைச்சரோ இச்சம்ப வங்கள் எதுவும் நடக்காததைப் போலவே நடந்து கொண்டு வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் ஒன்றியங்கள், நகரங்கள், பேரூர்கள், ஊராட்சிகளில் மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்றே சொல்ல முடி யாது. மின்சாரம் உள்ள நேரத்தைவிட, மின்சாரம் இல்லாத நேரம் தான் மிகவும் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் 16 மணி நேரம், 18 மணி நேரம் என்றெல்லாம் மின் வெட்டு நிலவுகிறது. இந்த மின்வெட்டு சம்பவத்தால் தான் காயத்ரி என்ற 9 வயதே கொண்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் கிராமத் தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (30), இரும்பு தள வாடங்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் காயத்திரி (9), அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு 8 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வழக்கம்போல மின் தடை ஆனது.
இந்நிலையில்,  வீட்டருகே விளையாடிக் கொண் டிருந்த காயத்திரி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நண்பர்கள் உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடினர்.
நீண்ட நேரமாகியும் காணாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த குபேந்திரராவ் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில் வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப் பட்டு கிடந்தது.
அதற்கு மத்தியில் மாணவியை சிறுமி காயத் திரியை மர்ம நபர்கள் கொடூரமாக சீரழித்து, கொலை செய்யப் பட்டிருந்தது தெரிய வந்தது. ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும் மர்ம நபர்கள் ஓடி விட்டனர்.
இந்த தகவல் அந்த கிராமத்தில் மட்டுமின்றி  அக்கம் பக்கம் உள்ள கிராமங்களிலும் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து திருப்பத்தூர் காவல் துறை அதிகாரி நாகராஜ், எஸ்.ஐ. ஜெயலட்சுமி ஆகியோர் அந்தக் கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கற்பழித்து, கொலை செய்யப் பட்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆண்டியப் பனூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.நல்லதம்பி கூறுகையில்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்ப னூர் கிராமத்தில் 2000 மக்கள் தொகை உள்ள ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோவிலில்  பவுர்ணமி பூஜை செய்வது வழக்கமான ஒன்று. அதை முன்னிட்டு நேற்று  முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் சிறுவர்கள் சிறுமிகள் பிரசாதம் வாங்கி கொண்டு வரும்போது மின்சாரம் நிறுத்தப்பட்டதை பயன்படுத்தி கொண்ட ஒரு சில கயவர்கள் அந்த வழியாக வந்த சிறுமி காயத்திரியை தூக்கிச் சென்று  குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்யாமல் மூடி மறைக்க நினைக்கிறது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடியவர்களை போலீசார் உட னடியாக கைது செய்தாக வேண்டும், இல்லையேல் ஒன்றியக் கழகத்தின் சார்பில் தலைமைக் கழகத்தின் அனுமதி பெற்று போராட்டம் நடத்துவோம் என கூறினார்.
உயர்நீதிமன்றம் தாக்கீது
தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து தமிழக அரசு வரும் 4ம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் தொடரும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை சென்னை உயர்நீதி மன்றம் தாமாகவே முன் வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் கிளாக் குளம், சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவ மனை, விருத்தாசலம் என தொட ரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர் பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கோரப் பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெங்கட் ராமன், வாசுகி ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த வழக்கு தொடர்பாக வரும் 4ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக