புதன், 30 ஜனவரி, 2013

விஸ்வரூத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க Jeya TV முயன்றதாக ???

விஸ்வரூபம் படத்தை ஏன் அதிமுக அரசு
 கடுமையாக எதிர்க்கிறது? : கலைஞர் விளக்கம்

 விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு இந்த அளவிற்கு கடுமையாக தடை விதிக்க காரணம் என்ன? என்பதற்கு திமுக தலைவர் கலைஞர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை மேலும் நீடிக்காமல் பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு  கொண்டுவரவேண்டும்.  கமல் ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மூலமாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலே உள்ள தமிழக அரசும் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.   கி.வீரமணி, ஜி.ராமகிருஷ்ணன், டாக்டர் ராமதாஸ், திருமாவளன், சரத்குமார் உள்ளிட்டோர் இப்பிரச் சனை சுமூகமாக பேசி முடிக்க வேண்டும் என்று வலியுறுத் தியுள்ளனர்.
ஆனால் தமிழக அரசு இதை காதில் வாங்கிக்கொள்ளாததோடு,  இதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை.   மேலும் தமிழக அரசு இந்த அளவிற்கு கடுமையாக இந்தப் படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணம்? 
அதிமுகவுக்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இந்த படத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும்,  ஆனால் திரைப்படத்தை 100 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரித்திருப்பதால் திரைப்படத்தை குறைந்த விலைக்கு விற்க மறுத்துவிட்டு அதிக விலைக்கு வேறு ஒரு தொலைக்காட்சிக்கு விற்றுவிட்டதுதான் காரணம் என்றும் கூறூகிறார்கள்.
அதைப்போல மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நூல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது,   வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக வரவேண்டும் என்று ப. சிதம்பரத்தை குறிப்பிட்டு பேசியதும் கோபத்திற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.  ஆனால், இந்த கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. 
நேற்று இரவு 10.15 மணிக்கு தடையை நீக்கி உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.  இதற்கு பிறகும் அதிமுக அரசு மனம் இறங்கியதா? இல்லை.  தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள எலிப்பி தர்மாராவ் வீட்டிற்கே சென்று மேல் முறையீட்டு மனு கொடுத்து தடையும் வாங்கி இருக்கிறார்கள். 
ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசிடம் இருக்கிறதா என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக