கார்கஸஸ்: வெனிசுலா அதிபரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
வெனிசுலா அதிபராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹுவே
சவேஸ் (58) புற்றுநோயால் அவதியுற்ற இவர் கடந்த ஒரு ஆண்டுகளில் கியூபா
சென்று நான்குமுறை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது கியூபாவில் சிகிச்சை
பெற்று வருகிறார். அவரது நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும்,
தொடர்ந்து அவர் சிகிச்சையில் இருப்பதால் அவரது உடல்நிலை மிகவும்
கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக