புதன், 30 ஜனவரி, 2013

கமல்ஹாசன்: அரசியல் சூழ்ச்சி இது! என்னை ‘அவர்’ வீழ்த்த நினைத்தால், ஏமாருவார்!

viruvirupu.com “இன்று விஸ்வரூபம் படத்தின் தடை விலக்கப்படாவிட்டால், இந்த வீட்டையும் நான் இழக்க நேரிடும். நான் எனது சகல சொத்துக்களையும் இழப்பேன். தமிழகத்தை விட்டு வெளியேறுவேன். வேறு ஒரு மாநிலத்தில் வாழ்வதற்கு உகந்த இடம் தேடுவேன். அதுவும் கிடைக்கவில்லை என்றால் வெளிநாடு செல்வேன்” என்று உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
நான் தமிழகத்தில் வாழ்வது பற்றி இன்று மதியம் தெரிந்துவிடும்.
இங்கு நடப்பவை அனைத்துக்கும் யார் காரணம் என்று என்னைக் கேட்காதீர்கள். உங்களுக்கே தெரியும். யார் காரணம் என்று உங்களுக்கே தெரியும். அரசியல் சூழ்ச்சி ஒன்றில் நான் சிக்கியிருப்பதாக நினைக்கிறேன்.
ஏன் தமிழகத்தை விட்டு வெளியேற நினைக்கிறேன் என்று கேட்கிறீர்களா? நானல்ல, நான் வெளியேற வேண்டும் என்று ‘தமிழகம்’ நினைக்கிறது!” என்றார் அவர்.
கமல் ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்றே தெரிகிறது. “என்னை வீழ்த்தலாம் என்று நினைக்காதீர்கள். வீழ்ந்தாலும், விதையாக வீழ்வேன். வளர்வேன். லட்சக்கணக்கான பறவைகள் வந்து அமரும் மரமாக மாறுவேன்” என்பது, கமல் ஒரு ‘முடிவு’ எடுத்திருப்பதை காட்டுகிறது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த காலத்தில் ஒரு தடவை ரஜினிகாந்த்தின் பேச்சு, மற்றும் நடவடிக்கைகளால் ஆட்சி இழந்தார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக