வியாழன், 31 ஜனவரி, 2013

பொட்டு சுரேஷ்’ மதுரையில் வெட்டி கொலை! போலீஸ் குவிப்பு!!

Viruvirup
அஞ்சாநெஞ்சரின் அஞ்சாத வலதுகை!
அஞ்சாநெஞ்சரின் அஞ்சாத வலதுகை!
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலது கை என சொல்லப்பட்டவரும், தி.மு.க. செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ், இன்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்டதை மதுரை போலீஸ் உறுதி செய்துள்ளது.
ஆனால், இது தொடர்பான தகவல்கள் சற்று குழப்பமாகவே உள்ளன.
மு.க.அழகிரியின் வீடு இருக்கும் சத்ய சாய் நகர் – பொன்மாரி நகர் பகுதியில், இரவு 8 மணி அளவில் பொட்டு சுரேஷ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது ஒரு தகவல். இது குறித்து அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்ததையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் என்றும் சொல்லப்பட்டது.
அதே நேரத்தில் நாம் மதுரை போலீஸை தொடர்பு கொண்டபோது, பொட்டு சுரேஷ் மதுரை துரைசாமி நகரில் உள்ள அவரது வீட்க்கு வெளியே வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார் என்றனர்.
மதுரை நகரில் தற்போது போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன், உடன் தருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக