ஞாயிறு, 20 ஜனவரி, 2013

சுஷ்மா தலைவராக அத்வானி ஆதரவு !

 dinamalar.com: பா.ஜ., தலைவராக சுஷ்மாவை தேர்வு செய்வதற்கு பா.ஜ.,வின் மூத்த தலைவர் அத்வானி ஆதரவு தெரிவித்துள்ளார். பா.ஜ. தேசிய தலைவராக நிதின்கட்காரி உள்ளார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இவர் பதவி விலக வேண்டும் என கட்சிக்குள் சில மூத்த தலைவர்களே வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தேர்தல் மூலமாக தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையினை வலியுறுத்தி வருகிறது பா.ஜ. அதன்படி தற்போது தலைவராக உள்ள நிதின்கட்காரி இரண்டாவது முறையாக தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என செய்திகள் வெளியாகின. இந்தநிலையில், அவருக்கு பதிலாக சுஷ்மா சுவராஜை தலைவராக அத்வானி பரிந்துரை செய்துள்ளார். இதற்கிடையே பா.ஜ.வில் முன்னர் தலைவராக இருந்த ராஜ்நாத்சிங் பெயரும் பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன  ராகுல்தான் காங்கிரஸ் வேட்பாளர் என்றால் சுஷ்மாவின் காட்டில் மழைதான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக