வக்கிரபுத்தி
கொண்ட ஆண்கள் பார்வையில் இருந்து தப்பிக்க மாணவிகள் குட்டைப்பாவாடை அணிய
தடை விதிக்கவேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் தொகுதி பா.ஜனதா கட்சி
எம்.எல்.ஏ. பன்வாரி சிங்கால் யோசனை தெரிவித்துள்ளார்.பன்வாரி சிங்கால் எம்.எல்.ஏ.வின் இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.சமூக ஆர்வலரும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கிரண்பெடி கூறியதாவது:-குட்டைப்பாவாடை
அணிவதால் ஒருவரின் குணம் கெட்டுப் போகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
குட்டைப்பாவாடை என்பது ஒரு உடை, அவ்வளவே. குட்டைப்பாவாடை அணியத் தடை
விதிக்க வேண்டும் என்று உத்தரவிடும் மக்கள் பிரதிநிதிகள் முதலில் அவர்களின்
நடத்தையை திருத்திக் கொள்ள வேண்டும், தங்களைத் தாங்களே பகுத்தாய்வு செய்து
கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதேபோல்,
தேசிய பெண்கள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் மமதா சர்மா, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான சுபாஷினி அலி மற்றும்
பல கல்லூரி மாணவிகளும் எம்.எல்.ஏ.வின் கருத்துக்கு கடும் கண்டனம்
தெரிவித்து உள்ளனர் nakkheeran.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக