எனவே அது பற்றி பேச அவசியம் இல்லை. அந்த தலைமை ஒரு காலத்தில் எனக்கு மிக நெருங்கிய நட்பு கொண்ட தலைமையாக இருந்தது. அந்த தலைமை பற்றி நான் அவதூறாக விமர்சனம் செய்ததாக காட்ட முடியாது. ஆனால், என்னை வீணாக வம்புக்கு இழுத்து, தரக்குறைவாக தாக்கி பேசி, நீங்கள் இங்கே வர வழிசெய்து கொடுத்த உங்கள் முன்னாள் தலைமைக்கு என் நன்றி. தமிழ்நாட்டில் 5 முறை ஆட்சி புரிந்த இந்த இயக்கம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு பணி செய்வதை கடமையாக கொண்டது. இந்த இனத்தை நம் இனத்தை சேர்ந்த காந்தி என்ற பெண்ணை என் மூத்த மகன் அழகிரிக்கு மணம் செய்து வைத்த போது எத்தனையோ பேர் மூக்கில் விரல் வைத்தனர். அதில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இப்படி ஒரு சமுதாய கலப்பு ஏற்பட வேண்டும். அவர் எந்த சாதி, இவர் எந்த சாதி என்று பிரித்து பேசினால் நாடு வாழாது. நம் நலிவு தீராது. எனவேதான் சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கின்றன. இந்த சமுதாயத்தின் எழுச்சிக்காக என் ஆயுள் உள்ள வரை பாடுபடுவேன். அதற்கு பிறகு என்ற கேள்விக்கு பதில் இங்கே அமர்ந்திருக்கிற ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. இவ்வாறு கருணாநிதி பேசினார். வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி வரவேற்றார். சுப.வீரபாண்டியன், பேராயர் சாமுவேல் ஆகியோர் பேசினர். திமுக துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், கல்யாணசுந்தரம், தலைமை நிலைய செயலாளர்கள் உசேன், துறைமுகம் காஜா, சதாசிவம், முன்னாள் எம்பி முகமது சகி, சுந்தரமூர்த்தி, ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். tamilmurasu.or
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக