ஞாயிறு, 23 டிசம்பர், 2012

Tamilnadu இந்த ஆண்டு 528 கற்பழிப்பு குற்றங்கள் நடந்துள்ளன

சென்னை: தமிழகத்தில் கற்பழிப்பு குற்றங்கள் பெருகி வருகின்றன. இந்த ஆண்டு 528 கற்பழிப்பு குற்றங்கள் நடந்துள்ளன என்று கருணாநிதி கூறியுள்ளார்.   திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில்:
 மீண்டும்.தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாரே?டெல்லியில் பேருந்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலேயே பிரச்னை எழுப்பப்பட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையை பெண்களே முற்றுகையிட முயற்சி செய்கின்ற அளவுக்கு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் என்ன நிலை? 21&12&2012 ஆங்கில நாளிதழில் தமிழகத்தில் கற்பழிப்பு குற்றங்களைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் கற்பழிப்புக் குற்றங்கள் 9 சதவீதம் அதிகம் என்று கூறியுள்ளது. தமிழ்நாடு போலீஸ் பற்றிய வலைதளத்தில், 2011ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை தமிழ கத்தில் 484 கற்பழிப்பு குற்றங்கள் என்பதற்கு மாறாக 2012ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 528 கற்பழிப்புக் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 528 குற்றங்களில், பெரும்பாலானவை அதாவது 75 கற்பழிப்புக் குற்றங்கள் சென்னை மாநகரில் மட்டும் பதிவாகியுள்ளன.
பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாகப் பணியாற்றும் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் தரப்பட்டு, அந்தப் பெண் ஊழியர் விஷம் அருந்தியதாக செய்தி வந்துள்ளது.அதுமாத்திரமல்ல, திருவைகுண்டம் அருகில் பள்ளிக்குச் சென்ற 7ம் வகுப்பு மாணவி 12 வயதான புனிதா, மர்ம நபரால் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, அனைத்து நாளேடுகளிலும் அது பற்றிப் பெரிதாகச் செய்தி வந்துள்ளது. ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் போதே, தமிழகத்துப் பெண்களுக்கு நேர்ந்து வரும் கொடுமைகள் பெருமைப்படும்படியாகவா இருக்கின்றன?

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தி வருகிறார்களே?திமுக அரசு இருந்த காலத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் கண்ணும் கருத்துமாக கவனிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போதோ கண்டுகொள்ளாமல் உள்ளதால் போராடாமல் என்ன செய்வார்கள்? அவர்களது கோரிக்கைகள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கள் மூலமாக உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, விரைவில் முடிவு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும். செம்மொழி நிறுவனத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் தமிழுக்காகப் பா டுபட்டவர்களுக்கு ஸீ10 லட்சம் மதிப்புள்ள சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என்பதற் காக, என் சொந்த நிதியிலிருந்து ஸீ1  கோடி வழங்கியிருந்தேன். திமுக ஆட்சிக் காலத்தில் அந்தப் 10 லட்சம் நிதியும், விருதும் கோவை செம்மொழி மாநாட்டில் அஸ்கோ பர்போலா என்ற ஆராய்ச்சி அறி ஞருக்கு வழங்கப்பட்டது.

ஆனால் திமுக அரசு மாறிய பிறகு அந்த விருதும் நிதியும் முடக்கப்பட்டுள் ளன என்ன ஆயிற்று என்றே தெரிய வில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தலித், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்களில் சலுகை வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே?ஆந்திர மாநிலத்தில் 10 சதவீதமும், ராஜஸ்தான் மாநிலத்தில் 5 சதவீதமும் தகுதி மதிப் பெண்களில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் வேறு சில மாநிலங்களிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தகுதி மதிப்பெண்களில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மா ற்றுத் திறனாளிகளுக்கு  இந்தச் சலுகை அளிப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.இவ்வாறு சலுகை அளிக்கப்படாமலேயே 12&7&2012, 14&10&2012 தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசு  இந்தச் சலுகையை அளித்திருந்தால், அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22,000 ஆசிரியர்களில் இந்தப் பிரிவின் சார்பில் குறைந்தபட்சம் 7 ஆயிரம் ஆசிரியர்களாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் தமிழக அரசு இந்த சலுகையை ஏன் இன்னும் வழங்கவில் லை என்று தெரியவில்லை. இது தொடர்பான வழக்கில்  தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது மேற்கொள்ளப்படும் பணி நியமனம், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் அறிவித்திருக்கிறார்கள். தமிழக அரசில் எப்படிப்பட்ட குளறுபடிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக