வெள்ளி, 14 டிசம்பர், 2012

London வெள்ளை இனத்தவர் சிறுபான்மை

லண்டனில் பிரிட்டிஷ் வெள்ளை இனத்தவர் சிறுபான்மை பிரிட்டன் தலைநகர் லண்டனில் வெள்ளை இனத்தவர் வரலாற்றில் முதல் முறையாக சிறுபான்மையினராக பதிவாகியுள்ளனர். 
2011 சனத்தொகை கணக்கெடுப்பின்படி லண்டனில் இருக்கும் 45 வீதமானோரே தம்மை ‘பிரிட்டன் வெள்ளையினர்’ என அடையாளப்படுத்தியுள்ளனர். 2011 சனத்தொகை கணக்கெடுப்பில் லண்டனில் வெள்ளையினத்தவர் 58 வீதமாக இருந்தமை குறப்பிடத்தகக்கது. லண்டனில் வாழ்பவர்களில் 37 வீதமானோர் பிரிட்டனுக்கு வெளியில் பிறந்தவர்கள் என்பதோடு அதிலும் 24 வீதமானோர் பிரிட்டனைச் சேர்ந்தவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டனில் குடியேற்றவாசிகளின் அதிகரிப்பை வெளிக்காட்டுகிறது என குடியேற்ற உரிமைகளுக்கான இணைப்பகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார். எனினும் 2011 சனத் தொகை கணக்கெடுப்பின்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள மொத்த சனத்தொகையில் 86 வீதமானோர் (48.2 மில்லியன்) வெள்ளையினத்தவராவர். அதிலும் 80 வீதமானவர்கள் (45.1 மில்லியன்) பிரிட்டன் வெள்ளையினத்தவராவர். இதில் லண்டனில் வசிக்கும் 8.2 மில்லியன் பேரில் 3.7 மில்லியன் பேரே பிரிட்டன் வெள்ளையினத்தவராவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக