“கருணாநிதியை சட்போட் பண்ண 1008 வழிகள் உள்ளன!” விஜயகாந்தின் முதல் சிக்னல்!!
Viruvirupu
“கருணாநிதிக்கு நான் இப்படி ‘சப்போர்ட்’ பண்ண வேண்டியதில்லை.
‘சப்போர்ட்’ பண்ண வேண்டுமென்றால், எனக்கு ‘வேறு வழிகள்’ பல இருக்கின்றன”
என்று முதல் தடவையாக சிக்னல் கொடுத்திருக்கிறார், விஜயகாந்த்.
கருணாநிதியுடன் விஜயகாந்த் நெருங்கி வருகிறார் என்று கூறப்படும் நேரத்தில்
இப்படி பேசியிருக்கிறார், கேப்டன்.
சென்னை, கோயம்பேடு, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் பேசிய விஜயகாந்த், “கடந்த ஆட்சியைப் பற்றி, ஜெயலலிதா, கடும் விமர்சனம் செய்தார். அப்போதைய முதல்வர் கருணாநிதி, அதை பெருந்தன்மையாக விட்டுவிட்டார். இப்போது, மின்வெட்டு, விலைவாசி உயர்வு பற்றிப் பேசினால், வழக்குப் போடுகின்றனர்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், போணியாகாது என்று பேசினர்; மக்கள் ஆதரவுடன் பெரிய கட்சியாக இன்று தே.மு.தி.க. வளர்ந்திருக்கிறது. கட்சியில் இருந்து, யார் வெளியில் சென்றாலும், நான் கவலைப்படமாட்டேன்; மக்களும், தொண்டர்களும் என்னுடன் இருக்கிறார்கள். மக்களுக்காக சிறை செல்ல, நான் தயாராக இருக்கிறேன்.
மின் வெட்டை தீர்ப்பதற்கு அமைச்சர்கள் ஆலோசனை நடத்தாமல், கல்யாண மண்டபத்தில் லோக்சபா தேர்தல் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆட்சியில், 7,000 மெகா வாட் மின் உற்பத்திக்கு, கருணாநிதி திட்டம் தீட்டினார். அதை செயல்படுத்தி இருந்தால் கூட, மின்வெட்டு பிரச்னை தீர வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இதையெல்லாம் பேசினால், ‘தி.மு.க.,விற்கு, சப்போர்ட் செய்து பேசுகிறேன்’ என்று கூறுவார்கள். சப்போர்ட் பண்ண வேண்டும் என்றால், வேறு மாதிரியெல்லாம், ‘சப்போர்ட்’ என்றும் பேசினார்.
முன்னதாக, பேராயர் எஸ்ரா சற்குணம் பேசுகையில், “கருணாநிதிக்கும், விஜயகாந்துக்கும் நெருக்கம் உண்டு. கருணாநிதியை பாராட்டி, விஜயகாந்த் விழா எடுத்துள்ளார். கருணாநிதியிடம் இருந்து விஜயகாந்த் இப்போது விலகி இருக்கிறார். அதற்கு நியாயமான காரணம் இருக்கும் என நினைக்கிறேன். தமிழகத்தில் உள்ள இருளை அகற்ற, நல்லவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய விஜயகாந்த், “நல்லவர்கள் யார் என்பதை, நானும் தேடிக்கொண்டே இருக்கிறேன். அதைக் கண்டுபிடிக்க, தெய்வம் எனக்கு வழிக்காட்டும்” என்றார்.
தெய்வம் அந்த வழிக்கு, ஒளி காட்டிவிட்டது போலிருக்கிறதே, இவருடைய பேச்சு! திமுக ஆட்சியில் 7000 மெகவாட் மினுற்பத்திக்கு திட்டமிடப்பட்டது அதை கிடப்பில் போட்டதே மிந்தட்டுப்பாட்டுக்கு காரணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக