சனி, 29 டிசம்பர், 2012

Delhi Gang Rape வயிற்றிலே நெருப்பை கட்டி கொண்டு பெற்றோர்

ஒவ்வொரு பெண்ணை பெற்ற தகப்பனும் கல்லூரிக்கோ, பள்ளிக்கோ அனுப்பிவிட்டு வீடு திரும்பும் வரை வயிற்றிலே நெருப்பை கட்டி கொண்டு இருக்க வேண்டி உள்ளது. நடைபெறும் சம்பவங்கள் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்து பெற்றோர்களையும் நிம்மதி இல்லாமல் ஆக்கிகொண்டுள்ளது. வெறும் மரண தண்டனை தீர்வாகிவிடாது. சில நாளில் மற்றொரு சம்பவம் இதனை இருட்டடிப்பு செய்து விடும். கடுமையான சட்டங்களும், ஊழலில் கரைந்து போகாத காவல் துறையும், சமயம் பார்த்து சறுக்கி ஓடாத  அரசியல் வாதிகளால் மட்டுமே அமைதியான மக்களாட்சியை கொண்டுவர முடியும் 
டில்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமாணவி, சிங்கப்பூரில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவிக்கு மூளைப் 
பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவி உயிரிழந்ததற்கு இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர், மக்களவை சபாநாயகர், டெல்லி முதல் அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மருத்துவ மாணவி உயிரிழந்ததற்கு, அவரது மூளையில் ஏற்பட்ட வீக்கமே முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து சிங்கப்பூர் மருத்துவமனை அதிகாரி கூறுகையில், மாணவி மரணத்திற்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பே முக்கிய காரணம். டில்லி மருத்துவமனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக பல்வேறு உறுப்புகள் செயலிழந்து விட்டது என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக