ஞாயிறு, 23 டிசம்பர், 2012

Delhi Bus Rape போராட்டம் புரட்சியாகவெடித்திருக்கிறது

டெல்லியில் நடந்த பேருந்து கற்பழிப்பு சம்பவம் இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆட்சியாளர்கள்  எண்ணியிருக்க மாட்டார்கள், தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் வெறும் ஒரு சம்பவத்திற்காக என்று நினைத்தால் அது தவறாகும் . ஆண்டாண்டு காலமாக பெண்கள் ஒடுக்கப்பட்டு வருவதற்கு எதிரான ஒரு புரட்சியாக இது வெடித்திருக்கிறது . பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு பெரிய தண்டனை வழங்கும் சட்ட சீர்திருத்தம் உடனே கொண்டு வருவது அவசியம் 
புதுடெல்லி: பஸ்சில் மாணவியை பலாத்காரம் செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வலியுறுத்தி, டெல்லியில் விடிய விடிய போராட்டம் நடத்தியவர்களை போலீசார் இன்று காலை அப்புறப்படுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரள்வதை தடுக்க இந்தியா கேட், ரெசினா ஹில்ஸ் பகுதியில் உள்ள 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் போலீசார் தடை உத்தரவும் பிறப்பித்துள்ளனர். இதற்கிடையே, போராட்டக்காரர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு திடீரென சந்தித்து, ‘குற்றவாளிகளுக்கு நிச்சயம் கடும் தண்டனை வழங்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் பஸ்சில் மருத்துவ மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு வெளியில் தூக்கி வீசப்பட்டார். கடந்த 6 நாட்களாக அளித்த தீவிர சிகிச்சைக்கு பிறகு மாணவியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பலாத்காரம் செய்தது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், மாணவியை பலாத்காரம் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், தன்னார்வ அமைப்புகள், மகளிர் அமைப்பினர், அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி டெல்லியில் நேற்று முன்தினம் ஏராளமானோர் பேரணி சென்றனர். ஜனாதிபதி மாளிகையை நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், நேற்று ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்தியா கேட் பகுதியில் கூடி ஊர்வலமாக புறப்பட்டனர். ஜனாதிபதி மாளிகை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தை முற்றுகையிட சென்றனர். ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் சரமாரியாக வீசினர். வஜ்ரா வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். எனினும், மாணவர்கள் கலைந்து செல்லவில்லை. அங்கு பதற்றம் ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ரெசினா ஹில்ஸ் பகுதியிலும், சோனியா வீட்டுக்கு வெளியிலும் பலர் போராட்டத்தை தொடர்ந்தனர். கடும் குளிர், பனியையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கோஷமிட்டபடி இருந்தனர். விடிய விடிய போராட்டம் நடந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டில் இருந்து வெளியில் வந்த சோனியா காந்தி, போராட்டக்காரர்களை அழைத்து பேசினார். அப்போது, Ô‘நான் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிச்சயம் அவர்களுக்குதண்டனை கிடைக்க நடவடிக்கை எடுப்போம்Õ’ என்றார். அதற்கு, Ô‘எப்போது அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்’Õ என்று போராட்டக்காரர்கள் கேட்டனர். Ô‘அதற்கு காலக் கெடு எதுவும் சொல்ல முடியாதுÕ’ என்று சோனியா பதில் அளித்தார். பரபரப்பான சூழ்நிலையில், இன்று அதிகாலை 6.30 மணிக்கு ரெசினா ஹில்ஸ் மற்றும் சோனியா வீட்டுக்கு அருகே சில பஸ்களுடன் போலீசார் வந்தனர். Ô‘டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொது இடத்தில் 4 பேருக்கு மேல் ஒன்றாக இருக்கக் கூடாது. உடனடியாக கலைந்து செல்லுங்கள். போராட்டம் நடத்துபவர்கள் ராம்லீலா மைதானம் அல்லது ஜந்தர் மந்தர் பகுதிக்கு செல்லுங்கள். இந்த பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதுÕ என்று எச்சரித்தனர். மேலும், சோனியா வீட்டு முன்பு இருந்தவர்களை பஸ்சில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், ரெசினா ஹில்ஸ் மற்றும் இந்தியா கேட் போன்ற பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீண்டும் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தடுக்க, இந்த பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பட்டேல் சவுக், சென்ட்ரல் செகரட்டரியேட், உத்யோக் பவன், ரேஸ் கோர்ஸ், பாரக்கம்பா, மாண்டி ஹவுஸ், கான் மார்க்கெட் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போலீசிடம் இருந்து அடுத்த உத்தரவு வரும் வரை இந்த ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறினர். ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவு வாயில், பிரதமர், அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ள வடக்கு தெற்கு பிளாக் சாலைகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக